
சென்னை: நவம்பர் 20-
சென்னையில் இன்று (நவ.,20) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 11,400 ரூபாய்க்கும், சவரன், 91,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 170 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று (நவ.,19) காலை, தங்கம் விலை கிராமுக்கு, 100 ரூபாய் உயர்ந்து, 11,500 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 800 ரூபாய் அதிகரித்து, 92,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, மூன்று ரூபாய் உயர்ந்து, 173 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 100 ரூபாய் உயர்ந்து, 11,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 800 ரூபாய் அதிகரித்து, 92,800 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, மூன்று ரூபாய் உயர்ந்து, 176 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை, சவரனுக்கு, 1,600 ரூபாய் அதிகரித்தது.இந்நிலையில் இன்று (நவ.,20) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துஒரு சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ. 11,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.173க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.















