தமிழகத்தில் மற்றொரு சாத்தான்குளம் சம்பவம்

சிவகங்கை: ஜூலை 2-
சாத்​தான்​குளம் சம்​பவம்​போல மடப்​புரத்​தில் மற்​றொரு சம்​பவம் நடை​பெற்​ற​தால் தமிழக மக்​கள் அதிர்ச்​சி​யில் உள்ளனர். தூத்​துக்​குடி மாவட்​டம் சாத் தான்​ குளத்​தைச் சேர்ந்​தவர் ஜெய​ராஜ். அவரது மகன் பென்​னிக்​ஸ். செல்​போன் கடை நடத்தி வந்த இரு​வரை​யும் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி சிறிய வாக்​கு​வாத பிரச்​சினைக்​காக போலீ​ஸார் காவல்​நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்​றனர்.
இரு​வரை​யும் காவல் நிலை​யத்​திலேயே போலீ​ஸார் கொடூர​மாகத் தாக்​கினர். சிறை​யில் அடைக்​கப்​பட்ட 2 பேரும் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவம் தமிழகத்தை அதிர்ச்​சி​யடையச் செய்​தது. தற்​போதைய முதல்​வரும், அப்​போதைய எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின், கனி​மொழி மற்​றும் சமூக செயல்​பாட்​டாளர்​கள், திரைப்பட பிரபலங்​கள், கிரிக்​கெட் வீரர்​கள் என பலதரப்​பிலும் கடும்கண்டன குரல்​கள் எழுந்​தன. இதனால் அதி​முக அரசுக்கு கடும் நெருக்​கடி ஏற்​பட்​டது.
காவல் துறை​யினர் பலர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்​றப்​பட்​டது.
இந்த வழக்கை 6 மாதங்​களுக்​குள் விசா​ரித்து முடிக்​கு​மாறு 2021 மார்ச் மாதம் உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. ஆனால், இன்​னும் வழக்கு விசா​ரணை முடிய​வில்லை. அதேநேரம் இருவரின் குடும் பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் மற்றும் ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. தற்​போது அதே​போன்ற சம்​பவம் திமுக ஆட்​சி​யில் மடப்​புரத்​தில் நடந்​தேறி​யுள்​ளது.
போலீ​ஸார், கோயில் காவலா​ளியை கொடூர​மாகத் தாக்​கிய​தில் உயி​ரிழந்​துள்​ளார். இதற்கு அதி​முக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்​சி, தவெக உள்​ளிட்ட கட்​சிகள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளன. ஆட்சி மாறி​னாலும், போலீஸ் விசா​ரணை உயி​ரிழப்​பு​களும், காவல் நிலைய உயி​ரிழப்​பு​களும் தொடர்ந்து கொண்​டு​தான் இருக்​கின்​றன. சாத்​தான்​குளத்​தில் 2 பேர் உயி​ரிழந்​த​போது அங்கு சென்ற ஸ்டா​லின், கனி​மொழி,
ஏன் மடப்​புரம் காவலாளி உயி​ரிழந்​த​போது வரவில்லை என்று பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.
சாத்​தான்​குளம் வழக்​கை​போல் தாமதப்​படுத்​தாமல், மடப்​புரம் அஜித்​கு​மார் உயி​ரிழப்பு வழக்​கில் விரைந்து நீதி கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் எனவும் கோரிக்கை எழுந்​துள்​ளது. தமிழகத்​தில் கடந்த 4 ஆண்​டு​களில் 24 போலீஸ் விசா​ரணை மற்​றும் காவல் நிலைய மரணங்​கள் ஏற்​பட்​டுள்​ள​தாக எதிர்க்​கட்​சிகள் குற்​றம்சாட்டி வரு​கின்​றன.