புதுடெல்லி: ஜனவரி 26 –
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட மொத்தம் 131 பேருக்குபத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், இந்தி நடிகர்தர்மேந்திரா, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, எழுத்தாளர் சிவசங்கரி, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உள்ளிட்டோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்ச் அல்லது ஏப்ரலில் நடைபெற உள்ள விழாவில் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்குவார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்று பத்ம விருதுகள்.
பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஆகிய 3 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கல்வி, இலக்கியம், அறிவியல்,
மருத்துவம், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி, சமூக சேவைஉள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
குடியரசு தினத்துக்கு முந்தைய நாளான 25-ம் தேதிபத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில், 5 பேருக்கு பத்மவிபூஷண், 13 பேருக்கு பத்மபூஷண்,
113 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 19 பேர் பெண்கள். 6 பேர் வெளிநாட்டினர் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள். 16 பேருக்கு மறைவுக்குபிந்தைய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
5 பேருக்கு பத்ம விபூஷண்: இந்தி நடிகர் தர்மேந்திரா (மறைவு), உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், வயலின் கலைஞர் என்.ராஜம், பி.நாராயணன் (இலக்கியம், கல்வி), கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (மறைவு) ஆகிய 5 பேர் பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். 13 பேருக்கு பத்ம பூஷண்: பாடகி அல்கா யக்னிக், பகத் சிங் கோஷ்யாரி, மருத்துவர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி, நடிகர் மம்முட்டி, டாக்டர் நோரி தத்தாத்ரேயுடு, பியூஷ் பாண்டே (மறைவு), எஸ்கேஎம் நிறுவனர் மயிலானந்தன், சதாவதனி ஆர்.கணேஷ், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் (மறைவு), தொழிலதிபர் உதய் கோட்டக், வி.கே.மல்ஹோத்ரா (மறைவு), வெள்ளப்பள்ளி நடேசன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் ஆகிய 13 பேர் பத்ம பூஷண் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
Home செய்திகள் தேசிய செய்திகள் தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு













