தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருமண முன் பணம் அறிவிப்பு

சென்னை: ஆக. 25-
சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு பிறகு, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்திருந்தார்.. இது ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துவந்த நிலையில், தற்போது இந்த திட்டம் குறித்த முக்கிய கோரிக்கை ஒன்று அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? அரசு ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மிக முக்கியமானது முன்பணத் திட்டமாகும்..
அந்தவகையில், தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கான திருமண முன்பணம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1989ம் ஆண்டில், அரசு ஊழியர்களின் மகன் திருமணத்துக்கு ரூ.3000, பெண் ஊழியர் அல்லது மகள் திருமணத்துக்கு ரூ.5000 அட்வான்ஸாக வழங்கப்பட்டது. இதற்கு பிறகு 1995ம் ஆண்டு, இந்த தொகை ரூ.6000 மற்றும் 10000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. திருமண உதவித்தொகை சட்டப்பேரவையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, 110 விதியின்கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்..
அதில், ”அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு ரூ.10000 மற்றும் ஆண்களுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இதனை பல மடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்” என்று அதிரடியாக அறிவித்திருந்தார்.