Home மாவட்டங்கள் பெங்களூர் தவெக எம்எல்ஏ நீரில் மிதந்து நேர்த்திக்கடன்

தவெக எம்எல்ஏ நீரில் மிதந்து நேர்த்திக்கடன்

மதுரை: ​மே 19 –
விஜய் முதல்​வ​ராகப் பதவி​யேற்​ற​தால் நீரில் மிதந்து ஆசனம் செய்து தவெக எம்​எல்ஏ கருப்​பையா நேர்த்​திக்​கடன் செலுத்​தி​னார். மதுரை மாவட்​டம் சோழ​வந்​தான் தொகு​தி​யில் தவெக சார்​பில் போட்​டி​யிட்டு வென்​றவர் எம்​.வீ.கருப்​பை​யா. சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது தவெக வெற்​றி​பெற்று விஜய் முதல்​வ​ராக வேண்​டும் என சோழ​வந்​தான் ஜெனகை மாரி​யம்​மனுக்கு அவர் வேண்​டு​தல் வைத்​திருந்​தார். இதன்​படி விஜய் முதல்​வ​ராக பதவி​யேற்​றார்.
இந்​நிலை​யில் நேற்று ஜெனகை மாரி​யம்​மன் கோயில் வைகாசி திரு​விழா கொடியேற்​றம் நடந்த நிலை​யில், நகரி சாலை​யில் ஆலங்​கொட்​டாரத்​தி​லுள்ள கிணற்று நீரில் தவெக கொடி​யுடன் கருப்பையா எம்​எல்ஏ மிதந்து 3 மணி நேரம் ஆசனம் செய்​தார். கட்சி நிர்​வாகி​களும் இந்​நிகழ்​வில் பங்​கேற்​றனர். ஏற்​கெனவே அதி​முகவில் எம்​எல்​ஏ​வாக இருந்த கருப்​பை​யா, ஜெயலலிதா முதல்​வ​ராக இருந்​த​போதும் நீண்​டநேரம் நீரில் மிதந்து சாதனை புரிந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.