Home பக்தி திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்

திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்

தூத்துக்குடி: ஜூன் 4-
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். கோவில் சிறந்த பரிகாரி ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவில் சண்முக விலாசம் மண்டபம் முன்பு அர்ச்சகர்கள் கோவில் பணியாளர்கள் காவலாளிகள் 10 வருடம் பணம் பெற்றுக் கொண்டு முறைகேடாக தரிசனத்திற்கு அனுமதிப்பதாக பல்வேறு புகார் எழுந்தது . இந்த பிரச்சனைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். புகழ்பெற்ற பரிகாரத் தலமாகவும் விளங்குவதால் விசேஷ நாட்களில் இங்கு கூட்டம் அலைமோதும். இதனால் ஏற்படும் நெரிசலைத் தாரகையாகக் கொண்டு நீண்டகாலமாக சில முறைகேடுகள் புகாராக எழுந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக சண்முக விலாச மண்டபம் முன்பாக அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் சில வழிகளில் பக்தர்களை முறைகேடாக அனுமதிப்பதாக புகார்கள் எழுந்தன. நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களைத் தவிக்கவிட்டு விட்டு பெரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு குறுக்கு வழியில் தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்பட்டது. இது நீண்டகாலமாக பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.
அமைச்சரின் ரகசிய ஆய்வு தந்த திருப்பம் சமீபத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் இந்த புகார்களை விசாரிக்கத் திருச்செந்தூரில் ரகசியமாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடந்த முறைகேடுகளை அவரே நேரில் பார்த்துக் கடும் அதிர்ச்சியடைந்தார். அர்ச்சகர் ஒருவர் நேரடியாகப் பணம் பெற்றுக்கொண்டு பக்தர்களைக் குறுக்கு வழியில் அழைத்துச் சென்றது கையும் களவுமாகப் பிடிபட்டார். இந்த ஆய்வின் விளைவாக உடனடியாக முறைகேட்டில் ஈடுபட்ட அர்ச்சகர்கள் மற்றும் கோவில் காவலாளிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இனி முறைகேடுகளுக்கு இடமே இல்லை என்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் சண்முக விலாசம் தற்போது சண்முக விலாச மண்டபம் மற்றும் முக்கிய வரிசைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு மொத்தம் 40 போலீசார் இரண்டு ஷிப்ட் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.இதன் மூலம் இடைத்தரகர்கள் மற்றும் முறைகேடான தரிசன முறைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன.