திருச்செந்தூர் கோவில் சூரசம்ஹாரம் முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

திருச்செந்தூர்: அக். 25-
கோவில் சூரசம்ஹாரம் முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்தது காவல்துறை
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் சூரசம்ஹாரம் முன்னிட்டு காவல்துறை போக்குவரத்து மாற்றம் செய்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தவிர தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் துவங்கி வருகின்ற 27.10.2025 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 28.10.2025 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது. கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நாட்களான வருகின்ற 26.10.2025 மற்றும் 27.10.2025 ஆகிய இரு தினங்கள் திருச்செந்தூர்
பகுதி வழியாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் சூரசம்ஹாரம் முன்னிட்டு காவல்துறை போக்குவரத்து மாற்றம் செய்துள்ளது. அதன்படி இரண்டு தினங்களில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தவிர தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.அதேபோன்று திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கும், உவரியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருச்செந்தூருக்கும், சாத்தான்குளத்தில் இருந்து பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கும் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.