திருடு போன ரூ.50 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு

பெங்களூர்: அக். 29-
பெங்களூரில் மொபைல் போன்கள் திருடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் ராம மூர்த்தி நகர் போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கி 11 குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் 23 வெவ்வேறு நிறுவனங்களின் சுமார் 2.50 லட்சம் மதிப்புள்ள மொபைல் போன்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
பொதுமக்களால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் புகார்களில், ரூ.48 லட்சம் மதிப்புள்ள பல்வேறு நிறுவனங்களின் 160 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு புகார்தாரர்களிடம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.


பெங்களூரு நகர காவல்துறை ஆணையர் மற்றும் கிழக்குப் பிரிவு டிசிபி தேவராஜ், ராம மூர்த்தி நகர் காவல் நிலையத்தின் அனைத்து அதிகாரிகள்/ஊழியர்களையும் மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மொபைல் போன்களைப் பறிமுதல் செய்து புகார்தாரர்களிடம் திருப்பி அனுப்பியதற்காக பாராட்டு தெரிவித்தனர்