சென்னை: ஆகஸ்ட் 11-
முதல்வர் ஸ்டாலின் இன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரூ.1,427 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.949 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்த ஸ்டாலின், ரூ.182 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.295 கோடியில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் ஸ்டாலின் வழங்கினார். திருப்பூர் மடத்துக்குளத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையையும், கோவை பொள்ளாச்சியில் காமராஜர் உள்ளிட்டோரின் சிலைகளை ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை கோவைக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவையில் இருந்து வேன் மூலமாக பொள்ளாச்சி வழியாக திருப்பூர் மாவட்டம் உடுமலை வந்தார். அப்போது திருப்பூர் தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் தலைமையில் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கருப்பு, சிவப்பு நிற பலூன்களை கையில் ஏந்தியபடியும், வரவேற்பு பதாகைகளை ஏந்தியபடியும் தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். மேலும் சாலையின் இருபுறமும் தொண்டர்கள், பெண்கள் திரளாக நின்று வரவேற்பு அளித்தனர்.
கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் தாராபுரம் சாலையில் உள்ள ஈஸ்வர சாமி எம்.பி.யின் உறவினர் வக்கீல் சிதம்பரசாமி வீட்டில் தங்கி ஓய்வெடுத்தார். இந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் திருப்பூர் உடுமலை நேதாஜி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரூ.949 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்த ஸ்டாலின், ரூ.182 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.295 கோடியில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் ஸ்டாலின் வழங்கினார்.
Home மாவட்டங்கள் பெங்களூர் திருப்பூரில் ரூ.1,427 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்














