கிருஷ்ணகிரி: செப்.27-
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் ராமநாயக்கன் ஏரி பூங்காவில் திருமணம் ஆகாதவர்களுக்கு அனுமதியில்லை என்று போலீசாரால் வைக்கப்பட்ட பேனரை கண்டு பொதுமக்கள் கடுமையான அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துவிட்டனர்..
ஓசூரில் மிகவும் பிரபலமான குழந்தைகள் பூங்கா என்று கருதப்படும் இந்த பூங்காவில் என்ன நடந்தது? ஓசூரில் 152 ஏக்கரில் அமைந்துள்ளது ராமநாயக்கன் ஏரி.. இந்த ஏரிக்கரையில் மாநகராட்சி சார்பில் 4 ஏக்கர் பரப்பளவில் குழந்தைகள் பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது..
குழந்தைகள் பூங்கா இந்த பூங்காவில், நடைபயிற்சி பாதை, உடற்பயிற்சி கருவிகள், தியான மண்டபம், மரப்பூங்கா, சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.. அத்துடன் ஏரிக்கரையையொட்டி இருக்கைகளும் போடப்பட்டுள்ளன.. எனவே ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் இந்த பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள்.. அதிலும் வார விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசல் சற்று அதிகமாகவே காணப்படும். அந்த அளவுக்கு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை ஈர்க்கக்கூடிய விதத்தில் இந்த பூங்கா திகழ்ந்து வருகிறது..
பள்ளி, கல்லூரி மாணவர்கள் இங்கு வந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஓசூர் பூங்கா – காதல் ஜோடி ஆனால், குழந்தைகள் பூங்காவில் காதல் ஜோடிகளும் வந்துவிடுகிறார்கள்.. பூங்காவுக்குள் நுழையும் இந்த ஜோடிகள்,
குழந்தைகள், பெரியவர்கள் கண்முன்னேயே முகம் சுளிக்கும் அளவுக்கு அத்துமீறும் செயல்களில் ஈடுபட்டு, கண்காணிப்பு கேமரா இல்லாத இடங்களில் அமர்ந்து ஆபாச நடவடிக்கையிலும் இறங்கிவிடுகிறார்களாம்..
அதிலும் நைட் நேரத்தில் செக்யூரிட்டிகள் யாருமே இந்த பூங்காவுக்கு இல்லை..
எனவே, சில இளைஞர்கள், இந்த பார்க்கில் நுழைந்து தண்ணி அடிப்பதையும் வாடிக்கையாக வைத்திருப்பதாக தெரிகிறது. மேலும் பல சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.. இந்த குற்றச்சாட்டுகள் அதிகரித்த நிலையில், பூங்காவை காலை மற்றும் மாலை நேரம் மட்டும் மாநகராட்சி நிர்வாகம் திறந்து வருகிறது. பகலில் பூங்காவை மூடிவிடுகிறார்கள். போலீஸ் பேனர் இப்படிப்பட்ட சூழலில், பூங்காவின் நுழைவாயில், நேற்று போலீசார் திடீரென ஒரு பேனரை கொண்டு வந்து வைத்தார்கள்.. அதில், “திருமணம் ஆகாதவர்கள் உள்ளே அனுமதியில்லை” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.. மேலும் தமிழக அரசின் முத்திரை, போலீசாரின் முத்திரை, காவல் உதவி எண் போன்றவை அனைத்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. பூங்காவிற்கு தினமும் வருபவர்கள் இதனை ஆதரித்தாலும், பொதுமக்களில் ஒருதரப்பினர் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.
Read more at: https://tamil.oneindia.com/news/krishnagiri/krishnagiri-hosur-childrens-park-banner-unmarried-people-are-not-allowed-and-what-did-police-say-thi-738619.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
















