திருமலை ஏழுமலையான் கோயில் மார்ச் 3 ஆம் தேதி மூடல்.. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

திருப்பதி, ஜன. 5- திருப்பதி சென்று வந்தால் திருப்பம் உண்டாகும் என்பது மக்கள் நம்பிக்கை. இதனால், ஏராளமான மக்கள் தினந்தோறும் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு வருவது வழக்கம். மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இதனால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் 10.30 மணி நேரம் மூடப்படவுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்இந்தியாவில் மிகவும் பிரபலமான கோவில்களில் திருப்பதி திருமலையும் ஒன்று. திருப்பதிக்கு நினைத்த போதெல்லாம் பக்தர்களால் வர முடியாது என்பதும், அப்படி வர நேர்ந்தால் வாழ்க்கையில் கண்டிப்பாக திருப்புமுனை ஏற்படும் என்பதும் நம்பிக்கை. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குவியும் பக்தர்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே இந்த மலை அமைந்துள்ளது. கார்கள், வேன்கள், சொகுது பேருந்துகள் என பலவற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். வெளிநாடுகள், வெளியூர், பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்கள் சுவாமிக்கு உண்டியல் காணிக்கையாக தங்கம், வெள்ளி, பணம், வெளிநாட்டு கரன்ஸிகள் என ஏராளமான மதிப்புக்க மிக்க பொருள்களை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
சந்திர கிரகணம் மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் 10.30 மணி நேரம் மூடப்படவுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணமானது பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.47 மணிக்கு நிறைவடைகிறது.
எப்போது கோயில் திறக்கப்படும் பொதுவாக வைகானச ஆகம விதிப்படி சந்திர கிரகணத்துக்கு 6 மணி நேரம் முன்பே கோயிலின் கதவுகள் மூடப்படும் என்பதால் காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஏழுமலையான் கோயில் மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரகணம் முடிந்த பின்னர் இரவு 7.30 மணிக்கு கோயில் திறக்கப்படும். சுத்தி மற்றும் புண்யாஹவசனங்கள் செய்யப்பட்ட பின்னர் பக்தா்கள் இரவு 8.30 மணி முதல் மீண்டும் சுவாமி தரிசனத்தை தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திர கிரகணம் நடைபெறவுள்ளதால் மார்ச் 3 ஆம் தேதி நடைபெறும் பல்வேறு சேவைகள், பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அஷ்டதள பாத பத்மராதன சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபாலங்கார சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் இதற்கேற்ப தங்களுடைய பணங்களை திட்டமிட்டுக் கொள்ளுமாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.