தீவிரவாதிகள் தப்புவது முறியடிப்பு

புதுடில்லி: ஜூலை 31 –
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இருந்து தப்பியோடுவதற்காக பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் தோண்டிய ரகசிய சுரங்கங்களை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து அதில் தண்ணீரைச் செலுத்தி அடைத்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு தப்பியோடுவது முறியடிக்கப்பட்டது என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியில் கடந்த 3 மாதங்களாக இந்திய ராணுவமும் புலனாய்வு அமைப்புகளும் ஈடுபட்டு வந்தன.இதனிடையே, ஜம்மு – காஷ்மீரில் இந்​திய ராணுவம், சிஆர்​பிஎஃப் மற்​றும் மாநில போலீ​ஸார் இணைந்து நடத்​திய `ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்​கை​யில் 3 தீவிர​வா​தி​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். கொல்​லப்​பட்ட 3 தீவிர​வா​தி​கள் சுலை​மான் என்​கிற ஃபைசல், ஹம்சா அப்​ஹான், ஜிப்​ரான் என அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளனர்.
முன்​ன​தாக பஹல்​காம் தாக்​குதலில் இவர்​கள் 3 பேரும் ஈடு​பட்​டதை உறுதி செய்​வதற்​காக, சண்​டிகரிலுள்ள தடய​வியல் அறி​வியல் ஆய்​வகத்​துடன் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தொடர்ந்து தொடர்​பில் இருந்​தார்.
அவர்​கள் பஹல்​காம் தாக்​குதலில் ஈடு​பட்​டதை உறுதி செய்த பின்​னரே தகவலை நாடாளு​மன்​றத்​தில் அவர் அறி​வித்​தார் என தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.
அது​மட்​டுமல்​லாமல், ஆபரேஷன் மகாதே​வின்​போது தீவிர​வா​தி​களிட​மிருந்து கிடைத்த ஆயுதங்​கள், துப்​பாக்​கி​கள் ஆகிய​வற்றை சண்​டிகர் ஆய்​வகத்​தில் ஆய்வு செய்​தனர். அந்த துப்​பாக்​கி​களில் இருந்து அப்​போது குண்​டு​கள் சுடப்​பட்டு பரிசோதனை செய்து பார்க்​கப்​பட்​டது. அப்​போது வெளி​யான காலி தோட்​டாக்​களை​யும், பஹல்​காமிலுள்ள பைசரன் பள்​ளத்​தாக்​கில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி கண்​டெடுக்​கப்​பட்ட காலி தோட்​டாக்​களை​யும் ஒப்​பிட்டு பார்த்​த​போது அவை ஒரே துப்​பாக்​கி​யில் இருந்து வந்​தவை என்​பது தெரிய​வந்​துள்​ளது.
மேலும், ஆபரேஷன் மகாதே​வில் ஈடு​பட்​டிருந்த பாது​காப்​புப் படை​யினர், எல்​லைப் பகு​தி​யில் தீவிர​வா​தி​கள் தப்​பிக்க அமைத்து வைத்​திருந்த ரகசிய சுரங்​கங்​களைக் கண்​டறிந்​தனர். இதையடுத்து சுரங்​கப் பகு​தி​யில் அவர்​கள் பள்​ளம் தோண்​டி, ரகசிய வழிகளில் வெள்ள நீர் வரு​மாறு செய்​து​விட்​டனர். இதனால் தீவிர​வா​தி​கள் பாகிஸ்​தானுக்கு தப்​பியோட முடி​யாத​படி தடுக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து அவர்​கள் என்​க​வுன்ட்​டரில் கொல்​லப்​பட்​டனர் என்று என்ஏஐ வட்​டாரங்​கள்​ தெரி​வித்​தன.