
புதுடெல்லி: ஆக. 20 –
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க செப்., 9ல் தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும், அன்றைய தினம் மாலை 5:00 மணிக்கு பின், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி துவங்கிய நிலையில், நாளை (ஆகஸ்ட் 21) முடிவடைகிறது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 20) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து இண்டி கூட்டணி சார்பில், ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.