தூத்துக்குடியில் பிரதமர் மோடி

தூத்துக்குடி: ஜூலை 26 –
தூத்​துக்​குடி​யில் விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட விமான நிலை​யத்தை பிரதமர் நரேந்​திர மோடி இன்று திறந்து வைத்​து, ரூ.4,500 கோடி மதிப்​பிலான திட்​டப் பணி​களை தொடங்​கிவைக்​கிறார். தூத்​துக்​குடி​யில் சர்​வ​தேச தரத்​தில் ரூ.452 கோடி​யில் விரிவாக்​கம் செய்​யப்​பட்​டுள்ள விமான நிலை​யத்​தின் திறப்பு விழா இன்று (ஜூலை 26) இரவு 8 மணிக்கு நடை​பெறுகிறது.
பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​று, விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட தூத்​துக்​குடி விமான நிலை​யத்தை திறந்​து ​வைத்​து, நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கிறார். இதற்​காக மாலத்​தீ​வில் இருந்து இந்​திய விமானப் படைக்கு சொந்​த​மான தனி விமானத்​தில் இன்று இரவு 7.50 மணி​யள​வில் தூத்​துக்​குடி விமான நிலை​யத்​துக்கு பிரதமர் வரு​கிறார். அவருக்கு முக்​கியப் பிர​முகர்​கள் வரவேற்பு அளிக்கின்றனர்.
தூத்​துக்​குடி விமான நிலை​யத்தை பிரதமர் மோடி திறந்​து​வைத்த பின்​னர், செட்​டி​நாடு கட்​டிடக் கலையை பிர​திபலிக்​கும் வகையில் அமைக்​கப்​பட்​டுள்ள விமான நிலைய பயணி​கள் முனை​யம் உள்​ளிட்ட இடங்​களைப் பார்​வை​யிடு​கிறார். பின்​னர், விமான நிலைய வளாகத்​தில் நடை​பெறும் விழா​வில் கலந்து கொண்​டு, தமிழகத்​தில் ரயில்வே துறை சார்​பில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.1,032 கோடி மதிப்​பிலான பணி​கள், தேசிய நெடுஞ்​சாலைத் துறை சார்​பில் முடிக்​கப்​பட்​டுள்ள ரூ.2,557 கோடி மதிப்​பிலான பணி​களை திறந்து வைக்​கிறார்.
கூடங்​குளம் அணுமின் நிலை​யத்​தில் ரூ.548 கோடி​யில் 3 மற்​றும் 4-வது உலை​யில் இருந்து மின்​சா​ரத்தை வெளி​யேற்​று​வதற்​காக உள்ள மின் பரி​மாற்ற அமைப்பு பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டு​கிறார். மொத்​தம் சுமார் ரூ.4,500 கோடி மதிப்​பிலான திட்​டப் பணிகளை பிரதமர் தொடங்​கி​வைத்​துப் பேசுகிறார்.
விழா​வில், தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ரவி மற்​றும் மத்​திய, மாநில அமைச்​சர்​கள், நாடாளு​மன்ற, சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள், அரசு உயர​தி​காரி​கள் கலந்​து​கொள்​கின்​றனர். விழா முடிந்த பிறகு இரவு 9.30 மணிக்கு தனி விமானம் மூலம் பிரதமர் திருச்​சிக்கு புறப்​பட்​டுச் செல்​கிறார்.
5 அடுக்கு பாது​காப்​பு… பிரதமர் பங்​கேற்​கும் விழாவை முன்​னிட்டு தூத்​துக்​குடி விமான நிலை​யத்​தில் பிரம்​மாண்ட பந்​தல் மற்றும் மேடை அமைக்​கப்​பட்​டுள்​ளது. விமான நிலைய வளாகம் முழு​வதும் சிறப்பு பாது​காப்​புப் பிரி​வினரின் கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது. சுமார் 2 ஆயிரம் போலீ​ஸார் 5 அடுக்​கு​களாக பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். மேலும், பிரதமர் வரு​கையை முன்​னிட்டு தூத்​துக்​குடி கடல் பகு​தி​யில் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. ஏடிஎஸ்பி, டிஎஸ்​பி, 3 ஆய்​வாளர்​கள் மற்​றும் 75 போலீ​ஸார் 24 மணி நேர​மும் படகி்ல் ரோந்து சென்​று, கண்​காணிப்​பில் ஈடுபடுகின்றனர். ட்ரோன்​கள் மூலம் கண்​காணிக்​க​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்று கடலோர பாது​காப்​புக் குழும டி.ஐ.ஜி மகேஷ்கு​மார் கூறி​னார்.