Home மாவட்டங்கள் பெங்களூர் தோல்விக்கு காரணமான திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை – ஸ்டாலின் தீவிரம்

தோல்விக்கு காரணமான திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை – ஸ்டாலின் தீவிரம்

சென்னை: ஜூன் 15-
2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட எதிர்பாராத தோல்விக்குப் பிறகு, திமுக தலைமை தீவிர சுயபரிசோதனையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிய அமைக்கப்பட்ட சிறப்பு கள ஆய்வு குழுவின் அறிக்கை தற்போது அறிவாலயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறுநில மன்னர்கள் போல் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் செயல்பட்டதாக தலைமைக்கு புகார் எழுந்த நிலையில், ஆக்சனுக்கு தயாராகி வருகிறாராம் ஸ்டாலின்.
தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக வலுவான கட்சியாக இருந்து வந்த திமுக, இந்த முறை தமிழக வெற்றி கழகத்தின் எழுச்சியால் கடுமையான பின்னடைவை சந்தித்தது. குறிப்பாக, ஆட்சியை தக்கவைத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கையில் இருந்த திமுக தலைமைக்கு தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை அளித்தன.
இதையடுத்து, தோல்விக்கான காரணங்களை ஆழமாக ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு வெறும் அலுவலக அறிக்கைகளை மட்டும் நம்பாமல், மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கட்சி நிர்வாகிகள், முன்னணி பொறுப்பாளர்கள், அடிமட்ட தொண்டர்களிடம் கருத்துக்களை சேகரித்தது. திமுக இந்த நிலையில் தான் அந்த ஆய்வின் முடிவுகள் தற்போது திமுக தலைமையை சிந்திக்க வைத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆய்வில் வெளிவந்த முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, மாவட்ட அளவிலான நிர்வாகிகளின் செயல்பாடுகள் தொடர்பானதாகும். தேர்தல் காலத்தில் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி பல இடங்களில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் கட்சி பின்னடைவை சந்தித்ததாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக வெற்றி கழகம் தமிழக வெற்றி கழகம், இளம் வேட்பாளர்களை முன்னிறுத்திய நிலையில், திமுகவில் பழைய முகங்களே மீண்டும் வாய்ப்பு பெற்றதாகவும், புதிய தலைமுறைக்கு இடம் கிடைக்காததால் கட்சிக்குள் விரக்தி ஏற்பட்டதாகவும் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தேர்தல் செலவுகளுக்காக தலைமையிலிருந்து வழங்கப்பட்ட நிதி முழுமையாக களப்பணிகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
பல மாவட்டங்களில் தேர்தல் நிதி பயன்பாடு குறித்து தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், அதனால் களத்தில் எதிர்பார்த்த அளவிலான தேர்தல் பணிகள் நடைபெறவில்லை என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. மாவட்ட அளவிலான சில நிர்வாகிகள் தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டதாகவும், சாதி மற்றும் குழு அடிப்படையிலான அணுகுமுறைகள் கட்சிக்குள் அதிருப்தியை அதிகரித்ததாகவும் ஆய்வு குழுவிடம் புகார்கள் குவிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமை தேர்தல் காலத்தில் பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாகவும், சிலர் நேரடியாகவே தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. “கட்சிக்காக செலவு செய்தோம், உழைத்தோம்; ஆனால் எங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை” என்ற உணர்வு பல இடங்களில் காணப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்து திமுக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. முக ஸ்டாலின் குறிப்பாக, மாவட்ட மற்றும் மாநில அளவிலான பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் நிலவி வருகிறது. கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்காக இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கருத்து தலைமை மட்டத்திலும் வலுப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், அடிமட்ட தொண்டர்களுடன் நேரடி தொடர்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து, கட்சியின் கட்டமைப்பை புதுப்பிக்கும் முயற்சியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இறங்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.