Home செய்திகள் உலக செய்திகள் நாடு கடத்தல் முயற்சியில் இருந்து தப்பிய இந்தியர் அமெரிக்க குடியுரிமை பெற்றார்

நாடு கடத்தல் முயற்சியில் இருந்து தப்பிய இந்தியர் அமெரிக்க குடியுரிமை பெற்றார்

வாஷிங்டன், ஆக. 16- கர்​நாட​கா​வில் பிறந்த தொழில்​நுட்​பத் தொழில்​முனை​வோர் சைமன் ஷெட்​டி, அமெரிக்​கா​வில் பல ஆண்​டு​களாக குடியேற்​றச் சிக்​கல்​கள், தொழில் ரீதி​யான பின்​னடைவை சந்​தித்​தார். அத்​துடன் தன்னை நாடு கடத்த முயன்​ற​தாகக் கூறப்​படும் பொய்​யான புகாரை எதிர்​கொண்ட நிலை​யில், அதிலிருந்து விடு​தலை பெற்று தற்​போது அமெரிக்க குடி​யுரிமை​யைப் பெற்​றுள்​ளார்.இந்த முக்​கிய​மான நிகழ்​வை, ஷெட்டி தனது இன்​ஸ்​டாகி​ராமில் பகிர்ந்​துள்​ளார். அதில், கர்​நாட​கா​வின் ஒரு சிறிய கிராமத்​திலிருந்து அமெரிக்​கக் குடிமக​னாக மாறிய தனது பயணத்​தைப் பற்றி நினைவு கூர்ந்​துள்​ளார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: நிதி நெருக்​கடி​யில் இருந்த நான் சர்​வ​தேச மாணவ​ராக அமெரிக்கா​வுக்கு வந்​த​போது, எனக்கு நண்​பர்​களோ, ஆதர​வளிக்க ஒருவரோ, மாற்​றுத் திட்​டமோ எது​வும் இல்​லை. அமெரிக்கா எனக்கு சிவப்​புக் கம்பள வரவேற்பை அளிக்​க​வில்​லை. ஒவ்​வொரு கட்​டத்​தி​லும் என்னை சோதனைக்கு உட்​படுத்​தி​யது. எனது பயணம் கடன், வேலை​வாய்ப்பு மறுப்​பு, விசா தொடர்​பான நிச்​சயமற்ற நிலை மற்​றும் நீண்​ட​கால குடியேற்​றப் பின்​னடைவு​கள் நிறைந்​த​தாக இருந்​தது. எச்​-1பி விசா குலுக்​கலிலும் நான் தோல்​வியடைந்​தேன். பின்​னர், தொழில்​நுட்​பத் துறை​யில் நிலைநிறுத்​திக் கொண்​டேன். ஒரு கட்​டத்​தில், சிலிக்​கான் பள்​ளத்​தாக்​கில் கிடைத்த நல்ல ஊதி​ய​முள்ள வேலை​யை​யும் விட்​டு​விட்​டு, தொழில்​முனை​வோர் ஆகும் முயற்​சி​யில் ஈடு​பட்​டேன். என்னை மோசடி செய்​பவர் என சித்​தரிக்க சிலர் முயன்​றனர். அவர்​கள் அமெரிக்க குடி​யுரிமை மற்​றும் குடியேற்ற சேவை​கள் அமைப்​பிடம் எனக்கு எதி​ராக புகார்​கள் அளித்​தனர். எனினும், அந்​தக் குற்​றச்​சாட்​டு​கள் விசா​ரணை​யில் நிலைக்​க​வில்​லை. அமெரிக்க குடியேற்ற அமைப்பு இறு​தி​யில் நியாய​மான முடிவை வழங்​கியது. எஃப்-1 மாணவர் விசா, எச்​-1பி பணி விசா உள்​ளிட்ட பல்​வேறு விசாக்​களில் இருப்​பவர்​கள் மற்​றும் நீண்​ட​கால குடியேற்​றத் தாமதங்​களை எதிர்​கொள்​பவர்​கள் பொறுமை​யாக இருக்க வேண்​டும். சட்​டத்​தைப் பின்​பற்ற வேண்​டும்.