Home செய்திகள் தேசிய செய்திகள் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தரமான மருத்துவச் சேவை; பிரதமர் மோடி பெருமிதம்

நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தரமான மருத்துவச் சேவை; பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: ஜூலை 1-
நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தரமான மருத்துவச் சேவை சென்று அடைகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
தேசிய டாக்டர்கள் தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டாக்டர்கள் தினத்தில், இந்தியாவின் சுகாதார அமைப்பின் முதுகெலும்பாகத் திகழும் நமது டாக்டர்களுகு்கு எங்களது வணக்கங்கள். அவர்களின் கடின உழைப்பு, கருணை மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி.மிகவும் சவாலான சூழ்நிலைகளிலும் அவர்கள் மேற்கொள்ளும் அயராத முயற்சிகள், எண்ணற்ற மக்களின் நம்பிக்கையையும் நன்றியையும் பெற்றுத் தந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் நமது சுகாதாரச் சூழலை வலுப்படுத்துவதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இருமடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளதுடன், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களும் கணிசமாக விரிவடைந்துள்ளன. இந்த முன்னோடியில்லாத வளர்ச்சி, டாக்டராக விரும்பும் மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்கி, ஒரு வலுவான சுகாதாரப் பணியாளர் குழுவைக் கட்டமைத்து, நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தரமான மருத்துவச் சேவை சென்றடைவதை உறுதி செய்கிறது.சுகாதாரத்தை ஊக்குவிப்பதிலும், மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்துவதிலும், அனைவருக்கும் மலிவான மற்றும் எளிதில் அணுகக்கூடிய சுகாதார சேவையை வழங்குவதிலும் நமது டாக்டர்கள் தொடர்ந்து முக்கியப் பங்காற்றுவார்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார் பட்டயக் கணக்காளர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியதாவது: பட்டயக் கணக்காளர் சமூகம் முழுவதற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.இந்தியாவின் பொருளாதாரப் பயணத்தில் அவர்கள் நீண்ட காலமாக நம்பிக்கைக்குரிய பங்காளிகளாக இருந்து வருகின்றனர். வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்முறைச் சிறப்புக்கான தங்களின் அர்ப்பணிப்பின் மூலம், அவர்கள் நமது நிதி அமைப்புகளை வலுப்படுத்துகிறார்கள்.வணிகங்களுக்கு ஆதரவளிக்கிறார்கள், தொழில்முனைவோரை ஊக்குவிக்கிறார்கள், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள். நாம் ஒரு வளர்ச்சிமிக்க இந்தியாவாக மாறுவதை நோக்கிப் பயணிக்கும் இவ்வேளையில், அனைவருக்கும் வாய்ப்புகள் ஏற்படுத்த ஒரு சூழலை உருவாக்க அவர்களின் முயற்சிகள் உதவுகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.