நாளை வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம்

சென்னை: ஜனவரி 26 –
வங்கி ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வாரத்தில் 5 நாள் வேலை முறையை அமல்படுத்த கோரி நாளை செவ்வாய்க்கிழமை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் நாடு முழுக்க பண பரிவர்த்தனை சேவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்கள் மன்றம் அறிவிப்புபடி, இந்த வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு, பிராந்திய கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற உள்ளனர்.நாடு முழுவதும் பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு, பிராந்திய கிராமப்புற, கூட்டுறவு வங்கிகள் இயங்கி வருகின்றனர். இதில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டாலும், வங்கி சேவை இன்றியமையாததாக உள்ளது. தற்போது வங்கிகளுக்கு மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இது போக இரண்டு சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது.அதாவது 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படுகின்றன. இந்த நிலையில் தான் இனிமே சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகள் தோறும் விடுமுறை வழங்க கோரி கோரிக்கை வைத்து வந்தனர். வேலைநிறுத்த போராட்டம் அதாவது 5 நாள் வார வேலை முறை நடைமுறைப்படுத்தக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்திய வங்கிகள் சங்கமும் ஒப்புக்கொண்டன. இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் சம்மேளனத்துடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்த நிலையில் நாளை நாடு முழுவதும் திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.