நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: ஜூலை 1 -அமெரிக்கா​வுடன் இந்​தி​யா​ சிறந்த மிகப்​பெரிய வர்த்தக ஒப்​பந்​தத்தை விரும்​புவ​தாக நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தெரி​வித்​துள்​ளார்.
இதுகுறித்து அவர் கூறிய​தாவது: இந்​தி​யா​வின் மிக முக்​கிய மற்​றும் முன்​னணி வர்த்தக பங்​கு​தா​ர​ராக அமெரிக்கா உள்​ளது. எனவே இந்​தியா – அமெரிக்கா​வுட​னான வர்த்தக ஒப்​பந்​தத்தை ஆவலுடன் எதிர்​பார்க்​கிறேன். வரும் 2047-க்​குள் வளர்ச்​சி​யடைந்த பாரதத்தை அடைய நமது இலக்​கு​களை​யும், லட்​சி​யத்​தை​யும் கருத்​தில் கொண்டு உலகின் வலு​வான பொருளா​தா​ரங்​களு​டன் இது​போன்ற ஒப்​பந்​தங்​களை செய்து முடிக்க தீவிரம் காட்ட வேண்​டும்.
அந்த வகை​யில், அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் கருத்​து​தான் என்​னுடையதும். அமெரிக்​கா-இந்​தி​யா​வுக்கு இடை​யில் சிறந்த மிகப்​பெரிய வர்த்தக ஒப்​பந்​தத்தை உரு​வாக்க வேண்​டும். இதற்​காக இந்​தியா ஆழமான ஈடு​பாட்டை கொண்​டிருந்​தா​லும் முக்​கிய​மான துறை​களில் சமரசம் செய்​யாது. குறிப்​பாக, விவ​சா​யிகள், கால்​நடை வளர்ப்​போர் உட்பட உள்​நாட்டு நலன்​களை பாது​காப்​ப​தற்கு முன்​னுரிமை கொடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.