
தெஹ்ரான்: ஜூலை 17 -அமெரிக்கா இடையே ஏற்பட்ட போர், பல ஆண்டுகளாக நீடித்தது. அதேபோல ஈரான்-அமெரிக்கா இடையேயும் போர் பல ஆண்டுகளுக்கு தொடரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. எப்படி இருந்தாலும் தாக்குதலை எதிர்கொள்ள தயார் என்று ஈரான் தலைவர் காமெனி தெரிவித்திருக்கிறார். அதே நேரம், அமெரிக்காவுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். நேற்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே பேசிய காமெனி, “அமெரிக்க அதிகாரத்தையும் சியோனிச(இஸ்ரேல்) ஆட்சியையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இஸ்ரேல் அமெரிக்காவின் கையில் இருக்கும் கயிறு கட்டிய வளர்ப்பு பிரானி” என்று கடுமையாக சாடியுள்ளார்.சமீபத்தில்தான் ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. ஈரான் வசம் உள்ள அணு சக்தி, அணு ஆயுததத்திற்காக பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது என்று சொல்லி இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கான ஆதாரங்கள் எதுவும் பொது வெளியில் வைக்கப்படவில்லை. அதே நேரம் ஈரான் வசம் அணு ஆயுதங்கள் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானும் இந்த தாக்குதலால் ஆத்திரமடைந்து இஸ்ரேல் மீது சரமாரியாக பதில் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் மீது மட்டுமல்லாது கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தை தாக்கியது. இதனால் அமெரிக்கா பயங்கர கடுப்பாகியிருக்கிறது. இந்த சூழல்கள் எல்லாம் சேர்ந்து, ஈரான் மீதான தாக்குதலை அடுத்த கட்டத்திற்கு அமெரிக்கா கொண்டு செல்லும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ஈராக் மீது அமெரிக்கா ஒரு காலத்தில் போரை நடத்தியிருந்தது. அந்த போர், சுமார் 9 ஆண்டுகள் வரை நீடித்தது. அப்படி ஒரு போரை அமெரிக்கா, ஈரான் மீது உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.