டோக்கியோ: ஜூலை 16-
நம்முடைய உலகில் எங்காவது ஒரு அதிசயமும், ஆச்சரியமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. அதேபோல, ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புகளும், தொழில் நுட்பங்களும் உலக மக்களை நாளுக்கு நாள் வியப்பில் ஆழ்த்தி வருகின்றன…
எனினும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.. இதுபோன்ற அதிசயங்களை, விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மக்களின் பார்வைக்கு கொண்டு வந்து தந்தவண்ணம் உள்ளனர்.. அந்தவகையில், ஜப்பான் விஞ்ஞானிகள் தங்களது தற்போதைய கண்டுபிடிப்பு பற்றி சொல்வது என்ன தெரியுமா? ஜப்பானிலுள்ள டோக்கியோ மற்றும் ஹொக்கைடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சமீபத்தில் பசிபிக் பெருங்கடலில் 6,200 மீட்டர் ஆழத்தில் கருப்பு நிற மர்ம முட்டைகள் கண்டுபிடித்துள்ளனர்.. ரிமோட் வாகனம் மூலம் இந்த முட்டைகளை கவனித்திருக்கிறார்கள்.. கருப்பு முட்டைகள் கடலுக்கு அடியில் 20,000 அடி ஆழத்தில். இந்த கருப்பு நிற முட்டைகள் குவியலாக இருந்துள்ளன.. கடலுக்குள் எப்படி இவ்வளவு முட்டைகள் என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்பட்டார்கள்.. அதேபோல, முட்டைக்குள் என்ன இருக்கிறது? என்ற ஆர்வமும் அதிகமாக கிளம்பியது. அது ஏதாவதொரு கடல் உயிரினங்களின் முட்டைகளாகவே இருக்கும் என்று நினைத்து, அவைகளை கொண்டுவந்து ஆய்வு செய்ய முடிவு செய்தனர். பசிபிக் கடலில் ஆழமான பகுதியாக உள்ளது “அபிசோபெலஜிக் மண்டலம்” ஆகும்.. எனவே அந்த முட்டைகளை அவ்வளவு ஆழத்திலிருந்து கடலுக்கு வெளியே கொண்டுவருவது மிகவும் சவாலாக இருந்துள்ளது.. எனினும் முட்டைகளை மேலே கொண்டு வந்தபோது, பெரும்பாலான முட்டைகள் உடைந்துவிட்டதாம்.. அவ்வளவு முட்டை குவியல்களில் வெறும் 4 முட்டைகள் பத்திரமாக மீட்கப்பட்டன. “சிறகடிக்க ஆசை மீனா இந்த டாப் ஹீரோவை தான் கல்யாணம் பண்ண போறாரா? அவரே வெளியிட்ட பதிவு “ முட்டையை உடைத்தால்? உடனே முதுகெலும்பில்லாத உயிரினங்களை ஆராயும் ஆராய்ச்சியாளர்களுக்கு முட்டைகள் அனுப்பப்பட்டன.. 4 முட்டைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.. ஆனால், அப்போதுதான் தெரிந்தது, அது முட்டையே கிடையாதாம்.. தட்டையான புழுக்களின் கூடு என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினார்கள்..இப்படியொரு புழு கூடுகளைப் பார்த்ததே கிடையாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்..
முட்டையை வெட்டியதுமே அப்போது, அதிலிருந்து பால் போன்ற வெள்ளை திரவம் வெளியேறியிருக்கிறது.. அதற்குள்ளே சின்ன சின்ன வெள்ளை உடல்கள் அடர்த்தியாக இருந்தன.. அப்போதுதான், அது புழுக்கள் கொண்ட கூடு அதாவது பிளாட்டிஹெல்மின்த்ஸ் என்பது உறுதியானது. இந்த முதுகெலும்பில்லாத உயிரினங்கள் கடலின் மிக ஆழம் வரை வாழக்கூடியதாம்.. கருப்பா பயங்கரம் பார்ப்பதற்கே கருப்பாக, பயங்கரமாக இருந்துள்ளன.. இவ்வளவு ஆழத்தில் தட்டையான புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்..

















