பசும்பொன்னில் யாகசாலை பூஜையுடன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை

ராமநாதபுரம்: அக்டோபர் 29-ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் உள்ள பசும்​பொன்​னில் முத்​து​ராமலிங்​கத் தேவரின் 63-வது குருபூஜை விழா மற்​றும் 118-வது ஜெயந்தி விழா 3 நாட்​களுக்கு நடை​பெகிறது. நேற்று காலை ஆன்​மிக விழா தேவர் நினை​விடப் பொறுப்​பாளர் காந்​தி​மீ​னாள் நடராஜன் தலை​மை​யில், உலக நன்​மைக்​காக கணபதி ஹோமம், யாக​சாலை பூஜைகள் நடை​பெற்​றன.
தொடர்ந்​து, தேவர் சிலைக்கு புனிதநீர் தெளிக்​கப்​பட்​டு, லட்​சார்ச்​சனை, மலர் அர்ச்​சனை நடை​பெற்​றது. இதில், மத்​திய முன்​னாள் அமைச்​சர் பொன்​.​ரா​தாகிருஷ்ணன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். இன்று (அக். 29) இரண்​டாம் கால யாக​சாலை பூஜை, லட்​சார்ச்​சனை விழா​வின் தொடர்ச்சி மற்​றும் அரசி​யல் விழா நடை​பெறுகிறது.
நாளை (அக்​.30) நடை​பெறும் ஜெயந்தி மற்​றும் குருபூஜை விழா​வில், காலை 9 மணிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அமைச்​சர்​கள் பங்​கேற்று மரி​யாதை செலுத்த உள்​ளனர்.
தொடர்ந்​து, காலை 10 மணிக்கு குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் மரி​யாதை செலுத்த உள்​ளார்.
இதையடுத்​து, அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மற்றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் மாலை அணிவித்து மரி​யாதை செலுத்த உள்​ளனர். விழாவையொட்டி, தென்​மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா தலை​மை​யில், ராம​நாத​புரம் சரக டிஐஜி மூர்த்​தி, மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் ஜி.சந்​தீஷ் மற்​றும் 10 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடுபட்டுள்ளனர்.