Home செய்திகள் தேசிய செய்திகள் பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரி தேசிய அளவில் கையெழுத்து இயக்கம்

பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரி தேசிய அளவில் கையெழுத்து இயக்கம்

புதுடெல்லி: மே 29-
நாடு முழு​வ​தும் பக்​ரீத் பண்​டிகை நேற்று கொண்டாடப்​பட்​டது. இதில், ராஜஸ்​தானின் ஜெய்​சல்மார் முஸ்லிம்​கள் ஒரு வித்​தி​யாச​மான முயற்​சியை தொடங்கி உள்ளனர்.
நேற்று காலை ஈத் தொழுகையை நிறைவேற்​றிய பிறகு, அந்நகரின் முஸ்​லிம் சமூகத்​தினர் பசுவை நாட்​டின் தேசிய விலங்காக அறிவிக்க ஒரு கையெழுத்து இயக்​கம் தொடங்​கினர். இதை ஜமாத் எ உலமா இ ஹிந்த் தலை​மை​யில் ஜெய்​சல்​மேரின் காதீம் ஈத்கா கமிட்டி தொடங்கி உள்​ளது.
இதற்​காக, ஜெய்​சல்​மேர் ஈத்கா மைதானத்​தில் ஒரு சிறப்பு கவுன்ட்​டர் அமைக்​கப்​பட்​டது. இங்கு தொழுகை முடிந்த உடன் அனைத்து முஸ்​லிம்​களும் வரிசை​யாக நின்று கையொப்​பம் இட்​டனர்.
கடந்த மே 24ம் தேதி, ஜெய்​சல்​மாரிலிருந்து 7 கி.மீ. தொலை​வில் உள்ள நகராட்சி குப்​பைக் கிடங்​கில் நூற்​றுக்​கணக்​கான பசுக்களின் சடலங்​கள் கிடந்​தன. இதனால் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், முஸ்​லிம்​களின் இந்த கையெழுத்து இயக்​கத்தைத் தொடங்கினர். இந்த கையொப்​பங்​களு​டன் கூடிய கோரிக்கை மனுவை ஜெய்​சல்மார் ஆட்​சி​யர் மூல​மாக, பிரதமர் மற்​றும் குடியரசுத் தலை​வரிடம் ஒப்​படைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.
பசுவுக்கு ஆதர​வாக முஸ்​லிம்​கள் குரல் கொடுப்​பது இது முதன்முறை அல்ல.
இதற்கு முன் கடந்த 2014-ல் ஜாமி​யத்
உலமா-இ-ஹிந்த் (அர்​ஷத் மதானி பிரிவு) அமைப்​பின் தலை​வர் மவுலானா அர்​ஷத் மதானி, பசுவை தேசிய விலங்​காக அறிவிக்கக் கோரி​னார். பசு வதை விவ​காரத்​தில் அரசி​யல் ஆதாய முயற்​சியை தடுப்​பதும், கும்​பல் வன்​முறைக்கு முற்றுப் புள்ளி வைப்​பதும் இதன் நோக்​க​மாக உள்​ளது.
இதற்​காக, பிரதமர் மோடி மற்​றும் வட மாநில முதல்​வர்​களை நேரில் சந்​திக்​க​வும் திட்​ட​மிட்​டுள்​ளனர். குறிப்​பாக,
நாட்​டின் அதிக மக்​கள்​ தொகை கொண்ட மற்​றும் அதிக முஸ்​லிம்​கள் வசிக்​கும் மாநில​மாக திகழும் உத்​தர பிரதேசத்​தின் முதல்​வர் யோகி ஆதித்ய​ நாத்தை முதலில் சந்​திக்க உள்​ளனர்.
இது போன்ற கோரிக்​கைகள் இது​வரை​யிலும் இந்து அமைப்​பு​களிடம்​ இருந்​தே எழுந்​தது குறிப்​பிடத்​தக்​கது.