Home மாவட்டங்கள் பெங்களூர் “பணம் வாங்கியும் ஏன் ஓட்டு போடலை” வீடு வீடாக ஏறி இறங்கும் அரசியல் கட்சியினர்

“பணம் வாங்கியும் ஏன் ஓட்டு போடலை” வீடு வீடாக ஏறி இறங்கும் அரசியல் கட்சியினர்

கோவை: ஏப்ரல் 27-
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி தான் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் ஓட்டுபோடுவதாக கூறி பணத்தை பெற்று கொண்டு வாக்கு செலுத்தாவர்களை கண்டுபிடிக்கும் பணியில் கோவையில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திடீரென்று அரசியல் கட்சியினர் இப்படி இறங்கியதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 23ம் தேதி நடந்து முடிந்தது. இந்த சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு மாநிலம் முழுவதும் பல கட்சிகளின் வேட்பாளர்கள் பணம், பரிசு பொருட்களை விநியோகம் செய்தனர்.
பல மாவட்டங்களில் ஓட்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000யை அரசியல் கட்சியினர் வழங்கி உள்ளனர். பல தொகுதிகளில் இந்த தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு கோவை மாவட்டமும் விதிவிலக்கல்ல. கோவை மாவட்டத்தின் பல்வறு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. கோவை வடக்கு – கோவை தெற்கு குறிப்பாக திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அதேபோல் கோவை வடக்கு தொகுதியில் வேட்பாளர் வெற்றி பெற்றவுடன் விலை உயர்ந்த பரிசுகள் வழங்கப்படும் என்பதை வாக்குறுதியாக வழங்கி இந்த டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில தொகுதிகளின் வாக்காளர்களுக்கு வாக்களித்த பின்னரே பணம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் முடிவடைந்த பிறகும் சிலருக்கு பணம் வழங்கப்பட்டது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகின. கோவை வடக்கு தொகுதியில் ஒரு கட்சி சார்பில் க்யூஆர் கோர்டு உடன் கூடிய டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
யாருக்கு ஓட்டுப்போட்டீர்கள்? இப்படியான சூழலில் தான் தற்போது கோவையில் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், வாக்குகள் பணம் பெற்ற வாக்காளர்களை தொடர்பு கொண்டு எந்த கட்சிக்கு வாக்களித்தனர்? என்று கேட்டு வருகின்றனர். பணம் வாங்கி கொண்டு தங்களுக்கு தான் ஓட்டளித்தனர் என்பதை உறுதி செய்யும் வகையிலும் தொகுதியில் எவ்வளவு ஓட்டுகள் கிடைக்கும் என்பதை வாக்களிப்பதாக அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றினார்களா? என்பதை உறுதிப்படுத்த முயற்சித்து வருகின்றனர். அதன்படி ஒவ்வொரு வாக்காளர்களையும் நேரில் அல்லது செல்போனில் தொடர்பு கொண்டு கோவை மாவட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் பேசி வருகின்றனர். பணம் வாங்கி ஓட்டுப்போடாதவர்கள் இந்த சமயத்தில் பணம் பெற்றும் வாக்கு சாவடிகளுக்கு செல்லாத வாக்காளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம், ‘’வாக்களிக்காமல் ஏன் பணம் பெற்றீர்கள்?’’ என கேள்வி எழுப்பி உள்ளனர். பல பகுதிகளில், வார்டு வாரியாக ஆட்கள் நியமிக்கப்பட்டு யார் யாருக்கு வாக்களித்துள்ளனர் என்பதை அறியும் பணி நடந்து வருகிறது. அதன்படி திமுக, அதிமுக என 2 கட்சிகளும் தங்களின் வாக்குச்சாவடிமுகவர்கள் வழியாக இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. வாக்களர்களிடம் மீண்டும் கேட்பது ஏன்? தமிழக சட்டசபை தேர்தல் முடிவு மே 4ம் தேதி தான் வெளியாக உள்ளது. விஜயின் அரசியல் வருகை, நான்கு முனை போட்டி உள்ளிட்ட விஷயங்களால் திமுக, அதிமுகவினர் திக்திக் மனநிலையில் உள்ளனர். விஜய் யாருடைய ஓட்டை பிரித்தார்? என்பது அவர்களுக்கு புரியாத புதிராக உள்ளது. இதனால் சட்டசபை தேர்தலில் தொகுதி வாரியாக கட்சிகளுக்கும் கிடைக்கும் ஓட்டை கணக்கிடும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. நிர்வாகிகள் சொல்வது என்ன? அதில் கோவை வடக்கு சட்டசபை தொகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘’யாருக்கு ஓட்டுப்போட்டீர்கள் என்று கேட்பதால் வாக்காளர்களிடம் இருந்து 100 சதவீதம் துல்லியமான தகவல்களை பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. இருப்பினும் ஓரளவு வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தனர்? என்பதை கணக்கீட்டு கொள்ள முடியும். ஒவ்வொரு தொகுதியிலும் தங்களுக்கு எவ்வளவு ஓட்டுகள் கிடைத்துள்ளது? என்பதை அறியவும், பண விநியோகம் எந்த அளவிற்கு மக்களிடம் சென்று சேர்ந்தது ? என்பதை அறியவும் இது உதவியாக இருக்கும்’’ அதேவேளையில் முக்கிய கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகி கூறுகையில், ‘’எத்தனை வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது? அதில் எத்தனை பேர் வாக்களித்தனர் என்பது தொடர்பான முழுமையான அறிக்கை எங்களிடம் கேட்கப்ட்டது. பணம் வாங்கியவர்கள் எங்களுக்கு தான் வாக்களித்தனர் என்று கூறுவார்கள். இருப்பினும் எங்களின் வாக்காளர்கள் என்று உறுதியாக நம்புவோரிடம் அவர்கள் வாக்களித்தார்களா? இல்லையா? என கேள்வி கேட்டு வருகிறோம்’’ என்றார்.