
மடிகேரி: அக். 9-
கர்நாடக மாநிலம் மடிக்கேரி கட்டகேரி கிராமத்தில் நடந்த ஒரு துயர சம்பவத்தில் குடியிருப்புப் பள்ளியில் 2 ஆம் வகுப்பு சிறுவன் உயிருடன் எரிந்து பலியானான்.
மடிகேரி அருகே கட்டகேரி கிராமத்தில் உள்ள ஹர் மந்திர் ஆசிரமப் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படிக்கும் புஷ்பக் பலியானார். இவர் அனில் குமார் மற்றும் திரிவேணி தம்பதியினரின் மகன் ஆவார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் பள்ளி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அடர்ந்த புகை மற்றும் தீப்பிழம்புகள் கட்டிடத்தை சூழ்ந்ததால், பள்ளியில் இருந்த மற்ற 29 மாணவர்கள் சரியான நேரத்தில் ஓடி சென்று தங்கள் உயிரை காத்துக் கொண்டனர் இருப்பினும், தூங்கிக் கொண்டிருந்த புஷ்பக் அறைக்குள் சிக்கி தீயில் சிக்கி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்த தகவல் தெரிய வந்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைப்பதில் வெற்றி பெற்றுள்ளனர். மடிகேரி கிராமப்புற போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து வழக்குப் பதிவு செய்தனர். தீ விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சிறுவன் புஷ்பக்கின் துயர மரணம் கடகேரி கிராமம் முழுவதும் துக்க சூழலை உருவாக்கியுள்ளது. இறந்த சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது















