
ஜெய்ப்பூர்: ஜூலை 25-
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பள்ளி மாணவர்கள் உடல் நசுங்கி பலியாகினர். மேலம் 17 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜாலவவார் மாவட்டம் பிப்லோடி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி இன்று காலையில் வழக்கமே்பால் செயல்பட்டது. அப்போது திடீரென்று பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதனால் பள்ளி வகுப்பறையில் இருந்த மாணவர்கள் கட்டட இடிபாடுகளுக்கு சிக்கி கொண்டனர். இதுபற்றி அறிந்தவுடன் கிராம மக்கள் ஓடிச்சென்று மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து மீட்பு பணியை தொடங்கினர்.இருப்பினும் 4 மாணவர்கள் பலியாகினர். 17 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த மாணவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஜலாவர் மாவட்ட எஸ்பி அமித் குமார் கூறுகையில், ‛‛பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததால் 4 மாணவர்கள் பலியாகி உள்ளனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 10 மாணவர்கள் ஜலாவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் 3 முதல் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்” என்றார்.