
மும்பை, ஜூலை 13- மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு வலது தோள் பட்டையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் அவரை முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து நலம் விசாரித்தார். ஆந்திரா துணை முதல்வராக இருப்பவர் நடிகர் பவன் கல்யாண். இவருக்கு வலது தோள்பட்டையில் உள்ள தசை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தோள் பட்டையில் அதிக வலியுடன் இருந்தார். அதற்கு சிகிச்சை எடுக்க செல்லாமல் மக்கள் பணிக்காக அந்த சிகிச்சையை அவர் தாமதப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பவன் கல்யாண் மும்பையில் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வலது தோள்பட்டையில் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இதுகுறித்து சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “துணை முதல்வர் பவன் கல்யாண் முழுமையாகவும் விரைவாகவும் குணமடைய வாழ்த்துகிறேன். அவரது நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன். இந்த காலத்தில் அவருக்கு மனவலிமை கிடைக்க வேண்டுகிறேன் என குறிப்பிட்டிருந்தார். பவன் கல்யாணை நேரில் சென்று சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார். அவரது மனைவியிடமும் நலம் விசாரித்தார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பவன் கல்யாண் எப்போதும் மக்களுடன் இருப்பவர், மக்களை ஈர்க்கும் பெரும் ஆற்றல் கொண்டவர்.மக்களிடையே இருக்கும் போது அவர் பெரும்பாலும் தன்னையே மறந்துவிடுவார். அதனால்தான் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இந்த வலியால் அவர் பலநாட்களாக அவதிப்பட்டு வருகிறார். தற்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு பவன் கல்யாண் நன்றாக இருக்கிறார். அவர் 3 வாரங்கள் ஓய்வு எடுத்ததும் பிசியோதெரபி சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். அதன் பிறகு மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவர் தனது மக்கள் பணியை தொடருவார் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். மேலும் பவன் கல்யாணுக்கு அளித்த சிகிச்சை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்யாணின் வலது தோள்பட்டையில் காயம் இருப்பது கண்டறியப்பட்டது.













