
மும்பை: ஜனவரி 30-
மறைந்த மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அஜித் பவார் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. புனே கூட்டுறவு வங்கித் தலைவராக இருந்த போது இவர் மீது ஊழல் புகார் எழுந்தது.
மேலும், வேளாண் துறை, மின்துறை, மண்வளப் பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் இவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் உள்ளன. இவர் மீதான ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில் சிவ சேனா (உத்தவ் அணி) மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் எக்ஸ் தளத்தில் நேற்று விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: அஜித் பவாருக்கு புகழஞ்சலி செலுத்த செய்திதாள்களில் முழுபக்க விளம்பரம் செய்துள்ளது பாஜக.
இந்த விளம்பரத்தால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. அஜித்பவார் மீதான ரூ.70,000 கோடி மதிப்பிலான ஊழல் குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடியும், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் திரும்ப பெறுவதே, பாஜக அவருக்கு செலுத்தும் உண்மையான புகழஞ்சலி. இவ்வாறு சஞ்சய் ராவத் கூறியுள்ளார்

















