பவுனுக்கு ரூ.2000 குறைந்த தங்கம் விலை; வெள்ளியும் குறைந்தது

சென்னை: அக். 18-
தங்கம், வெள்ளி விலை இன்று (அக்.18) சற்றே குறைந்துள்ளது.
இது பண்டிகையை ஒட்டி நகை வாங்குவோருக்கு சிறு ஆறுதலாக அமைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.250 குறைந்து ஒரு கிராம் ரூ.11,950-க்கு, பவுனுக்கு ரூ.2000 குறைந்து ஒரு பவுன் ரூ.95,600-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து ஒரு கிராம் ரூ.190-க்கு விற்பனையாகிறது.
எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்​சி, வட்டி விகிதத்தை அமெரிக்க ஃபெடரல் வங்கி குறைத்​தது, முதலீட்​டாளர்​களின் பார்வை தங்​கத்​தின் பக்​கம் திரும்​பியது உள்​ளிட்ட காரணங்​களால் தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்​து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது.
22 காரட் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11,900, ஒரு பவுன் ரூ.95,200-க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.300 என பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்தது. இதனால், நேற்று ஒரு கிராம் ரூ.12,200, ஒரு பவுன் ரூ.97,600 என உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
இந்நிலையில், இன்று பவுனுக்கு ரூ.2000 குறைந்துள்ளது, பண்டிகையை ஒட்டி நகை வாங்குவோருக்கு சிறு ஆறுதலாக அமைந்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
அக்.18 ஒரு பவுன் ரூ.95,600
அக்.17 ஒரு பவுன் ரூ.97,600
அக்.16 ஒரு பவுன் ரூ.95,200
அக்.15 ஒரு பவுன் ரூ.94,880
அக்.14 ஒரு பவுன் ரூ.94,600