
சென்னை: ஜனவரி.1- சமூக வலைதளங்களில் பிரபலமாகும் நோக்கில், முறையான பயிற்சி எதுவும் இல்லாமல், இளைஞர்கள் பாம்பு உள்ளிட்ட வன உயிரினங்களுடன், ஆபத்தான முறையில், ‘வீடியோ’ பதிவிடுவது அதிகரித்து வருகிறது. இதை வனத்துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வன உயிரின பாதுகாப்பு சட்டம், வன உயிரினங்களை பாதுகாக்கவும், அவற்றுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களை தடுக்கவும் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தின் கீழ், மனிதர்கள் வன உயிரினங்களை வேட்டையாடுவது, காயப்படுத்துவது மற்றும் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துவது, சட்ட விரோதமாகும்.
இச்சட்டத்தின் கீழ், கைது செய்யப்படும் நபருக்கு, மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை, சிறை தண்டனை வழங்கப்படுகிறது. எனினும், மனிதர்களால் வன உயிரினங்கள் தாக்கப்படும் சம்பவம், தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் பிரபலமாகும் நோக்கில், இளைஞர்கள் சிலர் முறையான பயிற்சி இல்லாமல், பாம்பு, குரங்கு உள்ளிட்ட வன உயிரினங்களுடன், ஆபத்தான முறையில் விளையாடுவதும், அவற்றை துன்புறுத்தி வீடியோ பதிவிடுவதும், சமீப காலமாக அதிகரித்து உள்ளன.
இதுகுறித்து, வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழக இளைஞர்கள், வன உயிரினங்களுடன் வீடியோ எடுத்து வெளியிடுகின்றனர். இதை தடுக்காததால், மாநிலத்தில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் செயலாக்கம் கேள்விக்குறியாகி உள்ளது. ஜனவரி.1-

















