பாய்மர படகில் தத்தளித்த 2அமெரிக்கர்களை மீட்டது இந்திய படை

புதுடெல்லி: ஜூலை 12 –
அந்​த​மான் அருகே கடல் கொந்​தளிப்பு காரண​மாக பாய்​மரப் படகில் தத்​தளித்த 2 அமெரிக்​கர்​களை, இந்​திய கடலோர காவல் படை​யினர் நேற்று மீட்​டனர். அமெரிக்​காவைச் சேர்ந்த இரு​வர் ‘சீ ஏஞ்​சல்’ என்ற நவீன பாய்​மரப் படகில் பல நாடு​களுக்கு செல்​லும் சாகச பயணத்​தில் ஈடு​பட்​டனர்.
அந்​த​மான் நிக்​கோ​பார் தீவு​கள் அருகே நேற்று கடல் கொந்​தளிப்​புடன் காணப்​பட்​டது. பலத்த காற்று வீசி​ய​தில் படகின் கம்​பத்​தில் கட்​டப்​பட்​டிருந்த பிளாஸ்​டிக் பாய்​கள் எல்​லாம் கிழிந்​தன.
இதனால் அந்த படகு பயணத்தை தொடர முடி​யாமல் நடுக்​கடலில் தத்​தளித்த​து. இத்​தகவல் சென்​னை​யில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதி​காரி​களிடம் தெரிவிக்​கப்​பட்​டது. அவர்​கள் இந்​திய கடலோர காவல் படையை தொடர்பு கொண்​டு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்​திய கடலோர காவல் படை​யின் ராஜ்வீர் கப்​பல் மீட்பு பணிக்கு சென்​றது. அந்​த​மான் நிக்​கோ​பார் தீவு​களுக்கு தெற்கே 53 மைல் தொலை​வில் படகில் தத்​தளித்​துக் கொண்​டிருந்த 2 அமெரிக்​கர்​களை​யும் இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர்.