பாஸ் டி லீ விளாசலில் நமீபி​யாவை வீழ்த்தியது நெதர்லாந்து!

புதுடெல்லி, பிப். 11- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நேற்று ‘ஏ’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் நெதர்லாந்து – நமீபியா அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த செய்த நமீபியா அணி 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 156 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக ஜான் நிக்​கோல் லோஃப்​டி-ஈடன் 38 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 42 ரன்​கள் எடுத்​தார். ஜேன் ஃபிரைலிங்க் 30, ஜே ஜே ஸ்மித் 22, கேப்​டன் ஜெர்​ஹார்டு எராஸ்​மஸ் 18 ரன்​கள் சேர்த்​தனர். மற்ற பேட்​ஸ்​மேன்​கள் இரட்டை இலக்கை ரன்னை எட்​ட​வில்​லை. நெதர்லாந்து அணி தரப்​பில் ஆல்​ர​வுண்​ட​ரான பாஸ் டி லீ 3 ஓவர்​களை வீசி 20 ரன்​களை வழங்கி 2 விக்​கெட்​களை வீழ்த்தினார். லோகன் வான் பீக் 3 ஓவர்​களை வீசி 13 ரன்​களை மட்​டும் விட்​டுக்​கொடுத்து 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​னார். 157 ரன்கள் இலக்​குடன் பேட் செய்த நெதர்​லாந்து அணி பவர்​பிளே​வில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 50 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீர​ரான மேக்ஸ் ஓ’ட​வுட் 7 ரன்​களில் வெளியேறினார். மற்​றொரு தொடக்க வீர​ரான மைக்​கேல் லெவிட் 15 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 28 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தார். இதன் பின்​னர் பாஸ் டி லீ அதிரடி​யாக விளை​யாடி​னார்.மட்​டையை சுழற்​றிய அவர், 38 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் தனது 5-வது அரை சதத்தை விளாசினார். அவருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய காலின் ஆக்​கர்​மான் 28 பந்​துகளில், ஒரு சிக்​ஸருடன் 32 ரன்கள் எடுத்த நிலை​யில் ஜான் நிக்​கோல் லோஃப்​டி-ஈடன் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இதைத் தொடர்ந்து களமிறங்​கிய கேப்​டன் ஸ்காட் எட்வர்ட்​ஸ், பாஸ் டி லீயுடன் இணைந்து மட்​டையை சுழற்றினார். இதனால் நெதர்​லாந்து அணி 18 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​பக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாஸ் டி லீ 48 பந்​துகளில், 4 சிக்​ஸர்கள், 5 பவுண்டரி​களு​டன் 72 ரன்​களும், ஸ்காட் எட்​வர்ட்ஸ் 9 பந்துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 18 ரன்​களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்​தனர். 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணிக்கு இது முதல் வெற்​றி​யாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்​டத்​தில் பாகிஸ்​தான் அணி​யிடம் வெற்​றியை கோட்டை விட்​டிருந்​தது. நெதர்​லாந்து அணி தனது 3-வது லீக் ஆட்​டத்​தில் வரும் 13-ம் தேதி அமெரிக்கா​வுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெறுகிறது. அதேவேளை​யில்​ நமீபி​யா தனது அடுத்​த ஆட்​டத்​தில்​ ​நாளை (12-ம்​ தேதி) இந்​தி​யாவை எ​திர்​கொள்​கிறது. இந்​த ஆட்​டம்​ டெல்லியில்​ நடைபெறுகிறது.