டெல்லி, ஜூலை 10- இந்தியாவில் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவிற்கு பிறகு தொடர்ந்து மூன்று முறை பிரதமராக பதவி வகிப்பது நரேந்திர மோடி தான். 11 ஆண்டுகளை கடந்து பிரதமராக உள்ள நரேந்திர மோடி, இந்த காலக்கட்டத்தில் 17 நாடுகளின் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். இதன் மூலம் நான்கு பிரதமர்களின் உரைகளை சமன் செய்துள்ளார். அதாவது எந்த இந்திய பிரதமரும் இத்தனை நாடாளுகளின் நாடாளுமன்றத்தில் போய் உரையாற்றியது இல்லை. அந்த சாதனையை பிரதமர் மோடி நிகழ்த்தியுள்ளார்.
இந்தியாவில் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருதான் அதிகபட்சமாக 17 ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ளார். தொடர்ந்து மூன்று முறை பிரதமராக இருந்தது. சுதந்திர இந்தியாவில் பிரதமர் ஜவஹர்லால் நேரு தான். அதன்பிறகு வந்தவர்கள் 10 ஆண்டுகளை யாருமே தாண்டவில்லை.. மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, ராஜீவ் காந்திக்கு பிறகு முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி பொறுப்பேற்றார். 3வது முறை பிரதமர் 2019ம் ஆண்டிலும் முழு மெஜார்ட்டியுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி பெறுப்பேற்றார். ஆனால் 2024ம் ஆண்டில் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பீகாரில் நிதீஷ்குமாரின் கட்சி, ஆந்திராவில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் கட்சி உள்பட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 3ஆவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். கடந்த 11 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் உள்ள நரேந்திர மோடி, கொரோனா காலக்கட்டத்தை தவிர மற்ற ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இதுவரை பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளார். 17 நாடுகளின் நாடாளுமன்றத்தில் உரை ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். முன்னதாக, இந்த 5 நாடுகள் பயணத்தில் கானா மற்றும் டிரினிடாட் டொபாகோ நாடுகளின் நாடாளுமன்றத்திலும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி இருந்தார். இவற்றையும் சேர்த்து கடந்த 11 ஆண்டுகளில் அவர் மொத்தம் 17 நாடுகளின் நாடாளுமன்றங்களில் உரையாற்றியிருக்கிறார். இதில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளின் நாடாளுமன்றங்களும் உள்ளன















