பிரதிகா ராவலுக்கு அபராதம்

துபாய்: ஜூலை 19-
இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான முதல் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி கடந்த 16-ம் தேதி சவும்​தாம்​டனில் நடை​பெற்​றது. இதில் 259 ரன்​கள் இலக்கை விரட்​டிய இந்​திய அணி 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இந்த ஆட்​டத்​தில் 18-வது ஓவரின் போது இந்​திய தொடக்க வீராங்​க​னை​யான பிர​திகா ராவல், ஒரு ரன் எடுப்​ப​தற்​காக ஓடிய போது இங்​கிலாந்து வேகப்​பந்து வீச்சு வீராங்​க​னை​யான லாரன் ஃபைலரின் தோளை இடித்​தார்.தொடர்ந்து அடுத்த ஓவரில் சோஃபி எக்​லெஸ்​டோன் வீசிய பந்​தில் பிர​திகா ராவல் போல்​டா​னார். ஆட்​ட​மிழந்து பெவிலியன் திரும்​பிச் செல்​லும் போது சோஃபி எக்​லெஸ்​டோனை​யும், பிர​திகா ராவல் இடித்​துச் சென்​றார். இது ஐசிசி நன்​னடத்தை விதி​களுக்கு எதி​ரானது என்​ப​தால் இந்த விவ​காரத்​தில் பிர​திகா ராவலுக்கு போட்​டி​யின் ஊதி​யத்​தில் 10 சதவீதம் அபராத​மும், ஒரு தகு​தி​யிழப்பு புள்ளியை​யும் தண்​டனை​யாக வழங்​கி​யுள்​ளது.