பிரியங் கார்கே வீட்டுக்கு பாதுகாப்பு

பெங்களூரு: அக். 15-
தமிழ்நாட்டை முன்மாதிரியாக கொண்டு, கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையாவுக்கு, அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அவருக்கு மிரட்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதைத்தொடர்ந்து அவரது வீடு அலுவலகம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அமைச்சர் எழுதிய கடிதத்தை தொடர்ந்து
கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்ய தலைமைச் செயலருக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அமைச்சர் பிரியங்க் கார்கேவை மிரட்டி வருகிறார்கள்.


இது குறித்து பேசி இருக்கும் அமைச்சர் பிரியங்க் கார்கே, ”ஆர்எஸ்எஸ்காரர்கள் என்ன தனிச் சலுகை கொண்டவர்களா? எப்படி அவர்கள் பொதுவெளியில் தடிகளுடன் ஊர்வலங்கள் நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள்? தலித்களோ பிற்படுத்தப்பட்ட சாதியினரோ தடிகளை வைத்துக் கொண்டு ஊர்வலம் நடத்தினால், விட்டுவிடுவார்களா? சட்டம் இருக்கிறது. சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா ஆர்எஸ்எஸ்காரர்கள்? அரசியல் சாசனத்தை விட பெரியவர்களா அவர்கள்? நிச்சயமாக கிடையாது.
கடந்த இரண்டு நாட்களாக என் செல்பேசி அடித்துக் கொண்டே இருக்கிறது. என்னையும் என் குடும்பத்தையும் அவதூறு பேசி வசவும் அழைப்புகள் வருகின்றன. காரணம், அரசு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆர்எஸ்எஸ் செயல்பாட்டை நிறுத்த வேண்டுமென நான் கூறியதுதான். இந்த அழைப்புகள் எந்த ஆச்சரியத்தையும் எனக்கு கொடுக்கவில்லை. இவர்கள் இப்படித்தான். இது வெறும் தொடக்கம்தான். புத்தர், பசவண்ணா, அம்பேத்கர் கனவு கண்ட சமத்துவம், பகுத்தறிவு, பரிவு கொண்ட சமூகத்தை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.
அதேபோல் முதலமைச்சர் சித்தராமய்யா, சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் ஒரு வழக்கறிஞர், சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசினார். எந்த மதமும் வெறுப்பை கற்றுக் கொடுப்பதில்லை. சட்டம் படித்த ஒரு நபர் இப்படி கீழ்த்தரமாக செயல்பட்டதை நாம் கண்டிக்க வேண்டும். இத்தகைய போக்கை சகித்துக் கொள்ளக் கூடாது. இது போன்ற விஷயங்கள் நடக்கும்போது, சமூகத்தில் எப்படி அமைதி நிலவும்” என தெரிவித்துள்ளார். இதற்கிடையே பெங்களூர் சதாசிவ நகரில் உள்ள அவரது வீடு அலுவலகம் மற்றும்
கலபுராகியில் உள்ள அவரது அலுவலக வீடு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சதாசிவனகாவில் உள்ள அவரது வீட்டு அலுவலகம், கலபுராகியில் உள்ள அவரது அலுவலக வீடு ஆகியவற்றிற்கு மூத்த போலீஸ் அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளனர், மேலும் அவர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
அமைச்சர் பிரியங்க கார்கே தனது சுற்றுப்பயணத்தின் போது கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அதிக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், மிரட்டல் அழைப்புகள் குறித்து பதிவிட்ட அமைச்சர் பிரியங்க கார்கே, கடந்த இரண்டு நாட்களாக தனது மொபைல் போன் தொடர்ந்து ஒலித்து வருவதாகக் கூறினார். அழைப்புகள் மிரட்டல்களால் நிறைந்துள்ளன. தன்னையும் தனது குடும்பத்தினரையும் மிரட்டி, மோசமான வார்த்தைகளால் திட்டுவதாக அவர் கூறினார். அரசு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளை தடை செய்ய கடிதம் எழுதியதற்காக தனக்கு மிரட்டல் அழைப்புகள் வருவதாக அவர் கூறியிருந்தார்.
இதனால் நான் கவலைப்படவில்லை. எனக்கும் ஆச்சரியமில்லை. ஆர்.எஸ்.எஸ். மகாத்மா காந்தியையோ அல்லது அம்பேத்கரையோ விட்டுவைக்கவில்லை, இப்போது என்னை விட்டுவைக்குமா. தனிப்பட்ட துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல்களால் என்னை அமைதிப்படுத்த முடியும் என்று அவர்கள் நினைத்தால், அது அவர்களின் தவறான புரிதல். இது வெறும் ஆரம்பம் என்று அவர் கூறினார்.