புதிய சாலைகளை உருவாக்குவது அவசியம்

சென்னை: ஜன.29- மதுராந்​தகம் அருகிலுள்ள கருங்​குழி​யில் இருந்து பூஞ்​சேரி வரை 32 கி.மீ. தொலை​வுக்கு புதிய சாலை அமைக்க தமிழக அரசு முடி​வெடுத்து, அதற்கான சாத்​தி​யக்​கூறு அறிக்கை தயாரிக்க தமிழ்​நாடு சாலை மேம்​பாட்டு நிறுவன ஆணையம் மூலம் டெண்டர் கோரி​யிருப்பது வரவேற்​கத்​தக்க முடிவாக அமைந்​துள்ளது.
தமிழகத்​தின் மக்கள்​தொகை 7 கோடி அளவுக்கு உயர்ந்​து​விட்ட நிலை​யில், வேலை​வாய்ப்பு மற்றும் படிப்பு போன்ற காரணங்​களுக்காக சென்னை உள்ளிட்ட பெருநகரங்​களில் இளைஞர்கள் குவி​யும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை நகரின் மக்கள்​தொகை ஒரு கோடியை எட்டி​யுள்​ளது. இதுதவிர, அண்டை மாவட்​டங்​களில் இருந்து சென்னைக்​குள் தினந்​தோறும் பல லட்சம் பேர் வந்து செல்​கின்​றனர்.
இந்த காரணங்​களால், தற்போதுள்ள சாலை மற்றும் போக்கு​வரத்து வசதிகள் போதாமல் சென்னை திணறும் நிலையே இருந்து வருகிறது. குறிப்​பாக, தாம்​பரம் மற்றும் பெருங்​களத்​தூர் பகுதி தென்​மாவட்​டங்​களில் இருந்து வந்து செல்​வோரின் நுழைவாயிலாக இருப்​ப​தால் எத்தனை மாற்​றங்கள் செய்​தா​லும் அப்பகு​தி​யில் போக்கு​வரத்து நெரிசல் குறைந்த​பாடில்லை.
வார இறுதி நாட்​களில் பலர் சென்னை​யில் இருந்து வெளியூர் செல்​வதும், மீண்​டும் சென்னை திரும்​புவதும் அதிகரித்து வருகிறது. பண்டிகை காலங்​களில் 10 லட்சம் பேர் சென்னை​யில் இருந்து வெளி​யேறு​வதும் மீண்​டும் விடு​முறை முடிந்து சென்னை திரும்​புவதுமாக இருப்​ப​தால் அத்தகைய நாட்​களில் சென்னை நகரின் நுழைவுப்​பகு​திகள் போக்கு​வரத்து நெரிசலை சமாளிக்க முடி​யாமல் திணறி வருகின்றன.