
உத்தரகாண்ட், ஆக. 6-
உத்தர காசி மாவட்டத்தின் டாராலி பகுதியில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பு காரணமாக பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பேரழிவை உருவாக்கி உள்ளது. நூற்றுக்கணக்கான பேரை காணவில்லை அவர்கள் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது அவர்களை மீட்கு பணி இன்று 2 வது நாளாக நடந்தது. அந்தப் பகுதியில் இருந்தவர்களில் 10 இந்திய ராணுவ வீரர்களையும் காணவில்லை. அவர்களையும் சேர்த்து தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேக வெடிப்பு காரணமாக இந்த கிராமமே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்தது இதில் இதுவரை 5 பேர் வரை பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது
முழு கிராமங்களும் மேக வெடிப்பில் மூழ்கியுள்ளன. இந்த சம்பவத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
மீட்புப் பணிகளுக்காக 150 பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 20 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர் பாதகமான வானிலை மற்றும் தகவல் தொடர்பு இழப்பு காரணமாக மீட்புப் பணி சவாலாக மாறியுள்ளது.
மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவு ஹர்சிலில் உள்ள இந்திய ராணுவ முகாமையும், நமது பாதுகாப்புப் படையின் ஒரு பகுதியையும் தாக்கியது. “இருப்பினும், உள்ளூர் மக்களுக்கு உதவவும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது” என்று நடவடிக்கைக்கு தலைமை தாங்கும் படைப்பிரிவுத் தளபதி பிரிகேடியர் மந்தீப் தில்லான் கூறினார்.
. திடீர் வெள்ளம் அண்டை கிராமங்களில் பரவலான பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றின் கரையில் உள்ள குடியிருப்புகளை நோக்கி சரிவுகளில் சேற்று நீர் மற்றும் சேறு பாய்வதை அப்பகுதியின் வீடியோக்கள் காட்டுகின்றன,
பனிப்பாறை வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்
உத்தர காசியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு மேக வெடிப்பு அல்ல, பனிப்பாறை சரிவு அல்லது பனிப்பாறை ஏரி வெடிப்பு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.திடீர் மேக வெடிப்பு காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. நேற்று இந்த வெள்ளத்தில் சிக்கி 11 ராணுவ வீரர்கள் காணாமல் போயினர். இவர்களை தேடும் பணிகள் இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தின் தாராலி கிராமம் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகள், மரங்கள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் பல மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
கீர் கங்கா ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் நேற்று அதிகாலை 1.50 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட வெள்ளம், மண் மற்றும் குப்பைகள் கிராமத்தின் பாதியை மூழ்கடித்தன. இந்த திடீர் வெள்ளம் தொடர்பான வீடியோக்கள் சேறும் சகதியுமான நீர் மற்றும் வண்டல் மண் சரிவுகளில் இருந்து குடியிருப்புப் பகுதிகளை நோக்கிப் பாய்வதைக் காட்டுகின்றன. மக்கள் பயத்தில் அலறும் சத்தங்களும் கேட்கின்றன. மூன்று மற்றும் நான்கு மாடி வீடுகள் உட்படப் பல கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. உத்தரகாசி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆர்யா கூறுகையில், இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் காணாமல் போனவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. உத்தரகாசியில் இன்னும் ரெட் அலர்ட் அமலில் உள்ளது. ஹர்சிலில் உள்ள இராணுவ முகாமில் இருந்து 11 இராணுவ வீரர்கள் காணாமல் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேக வெடிப்பால் இந்த முகாமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இராணுவம், காவல்துறை, தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படை (SDRF) ஆகியவை மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்திலிருந்து NDRF குழுக்கள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவசர உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன: 01374222126, 01374222722 மற்றும் 9456556431.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்குத் தொலைபேசி மூலம் பேசி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஏழு மீட்புக் குழுக்களை அனுப்ப உத்தரவிட்டார். மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து உயிர் சேதங்களைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். அண்டை மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் கிண்ணூரிலும் மேக வெடிப்பு மற்றும் பலத்த மழை பதிவாகியுள்ளது. டங்லிக் கால்வாயின் குறுக்கே இருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டது. கிண்ணூரின் நிக்லுசரி அருகே தேசிய நெடுஞ்சாலை 35 பலத்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளது. சண்டிகர்-சிம்லா தேசிய நெடுஞ்சாலையும் சிம்லாவின் சக்கி மோர் அருகே நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளது.