புரி ஜெகந்நாதருக்கு 208 கிலோ தங்க நகை அலங்காரம்

புரி, ஜூலை 7- புரி ஜெகந்​நாதருக்கு நேற்று 208 கிலோ தங்க நகைகளால் அலங்​காரம் செய்​யப்​பட்​டது. கடந்த 1460-ம் ஆண்​டில் அப்​போதைய கலிங்க மன்​னர் கபிலேந்​திர தேவா, தக்​காணத்து போர்​களில் வெற்றி பெற்று தங்க நகைகள், வைரங்​களு​டன் ஒடிசா திரும்​பி​னார். இந்த தங்க நகைகள், வைரங்​களை புரி ஜெகந்​நாதர் கோயிலுக்கு அவர் காணிக்​கை​யாக வழங்​கி​னார். அப்​போது ​முதல் புரி ஜெகந்​நாதர் கோயி​லில் சுனா பேஷா என்ற சிறப்பு நிகழ்ச்சி நடை​பெறுகிறது. ஆரம்ப காலத்​தில் சுமார் 138 தங்க நகைகளால் ஜெகந்​நாதருக்கு அலங்​காரம் செய்​யப்​பட்​டது. தற்​போது இந்த எண்​ணிக்கை 20 முதல் 30 ஆகக் குறைந்​துள்​ளது. கடந்த ஜூன் 27-ம் தேதி ஒடி​சா​வின் புரி ஜெகந்​நாதர் கோயில் ரத யாத்​திரை தொடங்​கியது. இந்த ரத யாத்​திரை​யின் 10-வது நாளான நேற்று சுனா பேஷா நிகழ்ச்சி நடை​பெற்​றது. அப்​போது ஜெகந்​நாதர் மற்​றும் பால பத்​ரர், சுபத்ரா தேவிக்கு 208 கிலோ தங்க நகைகளால் அலங்​காரம் செய்​யப்​பட்​டது. மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன. இதில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்​றனர். புரி ஜெகந்​நாதருக்கு தங்க நகை, தங்க பாதங்​கள், அலங்​காரத்தை மேற்​கொள்ள ஒரு மணி நேரத்​துக்​கு மேலானது என்​று அர்​ச்​சகர்​கள்​ தெரி​வித்​தனர்​.