பெங்களூர், செப். 1- பெங்களூரில் இன்று மாலை கனமழை கொட்டி தீர்த்தது.
சாலைகள் வெள்ளக்காராக மாறியது தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது
இன்று செப்டம்பர் முதல் நாளே பலத்த மழை பெய்தது. மழைக்கால நாட்களுடன் ஒப்பிடும்போது, இன்று மாலை பெய்த மழை மிக அதிகமாக இருந்தது.
மக்களும் வாகனங்களும் சாலையில் செல்ல முடியாத அளவுக்கு பலத்த மழை பெய்தது. திடீர் என பெய்த மழை காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். சாலையோரத்தில் உள்ள மரங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு அருகில் தஞ்சம் புகுந்தனர். சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது, இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. சாலைகளில் இரண்டு அடி முதல் மூன்று அடி வரை உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது.

வடிகால்களில் தண்ணீர் நிரம்பி வழிந்தது, துர்நாற்றம் வீசியது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்பட்டது. பல இடங்களில், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.டவுன்ஹால், மாநகராட்சி, ஜெயநகர், ஜேபி நகர் பகுதி, வில்சன் கார்டன், சாந்திநகர், லால்பாக் பகுதி, மல்லேஸ்வரம் சாலை, மந்திரி மால் ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. பிபிஎம்பி மண்டல அலுவலகத்திற்கு முன்னால் உள்ள சாலையும் வெள்ளத்தில் மூழ்கியது. கே.ஆர். மார்க்கெட், சாந்திநகரிலும் பலத்த மழை பெய்தது, சாலைகள் நீரில் மூழ்கின. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.