
நியூயார்க், ஜன. 8- உலகின் பல நாடுகளை அமெரிக்கா வெளிப்படையாக எதிர்க்க தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் வெனிசுலாவை கைப்பற்றி லத்தீன் அமெரிக்கா நாடுகளையும், ரஷ்யா, சீனாவையும் அமெரிக்கா எதிர்க்கிறது. கிரீன்லாந்தை கையகப்படுத்த திட்டமிடுவதன் மூலம் நேட்டோவையும், ஐரோப்பியன் யூனியனையும் அமெரிக்கா எதிர்க்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். “அமெரிக்கா முதலில்” என்ற கொள்கையின் கீழ், அமெரிக்க நலன்களுக்கு எதிரானதாகக் கருதப்படும் இந்த அமைப்புகளில் இருந்து விலகும் அதிபரின் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை கடந்த வியாழக்கிழமை அறிவித்தது. இந்தியாவின் சோலார் குழு உட்பட 66 குழுக்களில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. இந்த உத்தரவு, ஐ.நா.வுடன் தொடர்பு இல்லாத 35 குழுக்களுக்கும், ஐ.நா. அமைப்புகளின் கீழ் வரும் 31 அமைப்புகளுக்கும் நிதி வழங்குவதையும், அவற்றில் ஈடுபடுவதையும் அனைத்து அரசு நிறுவனங்களும் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

















