
சென்னை: ஜனவரி 17-
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.518 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி இருக்கிறது. போகி பண்டிகையான ஜனவரி 14ஆம் தேதி மட்டும் ரூ.217 கோடிக்கும், பொங்கல் பண்டிகையன்று ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகி இருக்கிறது. இது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை காலங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே மது விற்பனை அதிகரித்து வருகிறது. பொங்கல் பண்டிகையின் போது பலரும் சொந்த ஊர்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த கொண்டாட்டங்களின் போது இளைஞர்கள் பலரும் மது குடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. போகிப் பண்டிகையான ஜனவரி 14ஆம் தேதியன்று மட்டும் ரூ. 217 கோடிக்கும், பொங்கல் பண்டிகையான ஜனவரி 15ஆம் தேதியன்று ரூ.301 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.















