மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து: ‘சி’ பிரிவில் இடம் பெற்றது இந்திய அணி

புதுடெல்லி, ஜூலை 30- ஆசிய கால்​பந்து கூட்​டமைப்பு சார்​பில் மகளிருக்​கான ஆசிய கோப்பை கால்​பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 1 முதல் 21-ம் தேதி வரை ஆஸ்​திரேலி​யா​வில் நடை​பெறுகிறது. 12 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடருக்​கான ‘டி​ரா’ நிகழ்வு நேற்று சிட்​னி​யில் நடை​பெற்​றது. தொடரில் பங்​கேற்​கும் 12 அணி​களும் 3 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. இந்​திய மகளிர் அணி ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் முன்​னாள் சாம்​பியன்​களான ஜப்​பான், சீன தைபே மற்​றும் வியட்​நாம் அணி​களும் இடம் பெற்​றுள்​ளன. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் மார்ச் 4-ம் தேதி வியட்​நா​முடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் பெர்த் மைதானத்​தில் நடை​பெறுகிறது. தொடர்ந்து 7-ம் தேதி ஜப்​பானுட​னும், 10-ம் தேதி சீன தைபேவுட​னும் மோதுகிறது. இந்த இரு ஆட்​டங்​களும் சிட்​னி​யில் நடை​பெறுகின்​றன. ஒவ்​வொரு பிரி​விலும் முதல் இரு இடங்​களை பிடிக்​கும் அணி​களும் 3-வது இடத்தை பிடிக்​கும் சிறந்த அணி​களில் இரண்​டும் என மொத்​தம் 8 அணி​கள் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறும்.அரை இறு​திக்கு முன்​னேறும் 4 அணி​கள் 2027-ம் ஆண்டு பிரேசில் நாட்​டில் நடை​பெற உள்ளஃ பிபா மகளிர் உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்கு தகுதி பெறும். அதேவேளை​யில் கால் இறு​தி​யில் தோல்வி அடை​யும் 4 அணி​கள் பிளே ஆஃப் சுற்​றில் மோதும். இதில் 2 அணி​கள் உலகக் கோப்பை தொடருக்கு தேர்​வாகும். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை வென்ற ஜப்​பான் அணி ஆசிய அளவில், ஃபிபா தரவரிசை​யில் 7-வது இடத்​தில் உள்​ளது. அந்த அணி ஆசிய கோப்பை கால்​பந்து தொடரில் 2014, 2018-ம் ஆண்டு சாம்​பி யன் பட்​டம் வென்​றிருந்​தது. வியட்​நாம் தரவரிசை​யில் 37-வது இடத்​தில் உள்​ளது. அந்த அணி 2022-ம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் கால் இறுதி சுற்​றில் தோல்வி அடைந்​திருந்​தது. எனினும் பிளே ஆஃப் சுற்​றில் முதலிடம் பிடித்து 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அறி​முக அணி​யாக நுழைந்திருந்தது. ஆசிய கால்​பந்து தொடரில் 3 முறை சாம்​பியன் பட்​டம் வென்​றுள்ள சீன தைபே அணி ஃபிபா தரவரிசை​யில் 42-வது இடத்​தில் உள்​ளது. அந்த அணி​யும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் நோக்​கில் களமிறங்​கக்​கூடும். இந்​திய அணி தரவரிசை​யில் 70-வது இடத்​தில் உள்​ளது. 1980, 1983-ம் ஆண்​டு​களில் இறு​திப் போட்டி வரை முன்​னேறிய இந்​திய அணி இம்​முறை மேம்​பட்ட செயல் திறனை வெளிப்​படுத்​து​வ​தில் கவனம் செலுத்​தக்​கூடும். ‘ஏ’ பிரி​வில் ஆஸ்​திரேலி​யா, தென் கொரி​யா, ஈரான், பிலிப்​பைன்​ஸ் அணி​களும், ‘பி’ பிரி​வில் வட கொரி​யா, சீனா, வங்​கதேசம், உஸ்​பெகிஸ்​தான் அணி​களு​ம்​ உள்​ளன. நடப்​பு ​சாம்​பிய​னாக உள்​ள சீ​னா 10-வது முறை​யாக கோப்​பை வெல்​லும்​ முனைப்​பில்​ களமிறங்​குகிறது.