மகளிர் புட்சால் கால்பந்து: மாலத்தீவுகளை பந்தாடியது இந்திய அணி

புதுடெல்லி, ஜன. 14- தெற்​காசிய கால்​பந்து கூட்​டமைப்பு சார்​பில் மகளிருக்​கான புட்​சால் சாம்​பியன்​ஷிப் போட்டி தாய்​லாந்​தில் நடை​பெற்று வரு​கிறது.இதில் இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் நேற்று மாலத்​தீவு​களு​டன் மோதி​யது. தொடக்​கம் முதலே ஆதிக்​கம் செலுத்​திய இந்திய மகளிர் அணி 11-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று தொடரை சிறந்த முறை​யில் தொடங்​கியது. இந்​திய அணி சார்​பில் குஷ்பு சரோஜ் 4 கோல்​கள் (17, 22, 24, மற்றும் 26-வது நிமிடங்​கள்) அடித்து அசத்​தி​னார். ரித்​திகா சிங் (6, 17-வது நிமிடங்​கள்), சோனாலி (17, 37-வது நிமிடங்​கள்), நிஷ்கா பிர​காஷ் (33, 34-வது நிமிடங்​கள்) ஆகியோர் தலா 2 கோல்​கள் அடித்​தனர். முன்​ன​தாக மிதிலா ரமணி (4-வது நிமிடம்) போட்​டி​யின் முதல் கோலை அடித்​தார். இந்​திய அணி​யின் அச்​சோம் டெஜியோ 39-வது நிமிடத்​தில் சுயகோல் அடித்​தார். இதன் காரண​மாகவே மாலத்​தீவு​கள் ஒரு கோலை பதிவு செய்​ய முடிந்​தது. தாய்லாந்தில் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் மகளிருக்கான புட்சால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மாலத்தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் ஆக்ரோஷமாக விளையாடிய இந்திய வீராங்கனை.