
கிருஷ்ணகிரி: ஆக. 30-
வரவேற்பு நிகழ்ச்சியில், மணப்பெண்ணை நடனமாட கட்டாயப்படுத்திய மாப்பிள்ளையின் போதை நண்பர்களால், திருமணமே நின்று போனது.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், தனியார்
நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபருக்கும் காவேரிப்பட்டணத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஆக., 27ல் திருமணம் நடக்க இருந்தது.திருமணத்திற்கு முதல் நாள் மாலை மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு, 10:–00 மணியளவில் மணமகனின் நண்பர்கள் சிலர் மது போதையில் மண்டபத்திற்குள் வந்து நடனமாடினர். வரவேற்பு மேடையில் நின்ற மாப்பிள் ளையை நடனமாடும் படி கூறிய அவர்கள், சிறிது நேரத் தில் மணப்பெண்ணையும் நடனமாடுமாறு கூறினர். மணப்பெண், ‘இதுபோன்று நடனமாடுவதில் எனக்கு விருப்பம் இல்லை’ என, கூறினார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு, பெண் வீட்டாரை, மணமகனின் போதை நண்பர்கள் தாக்கினர்இ தைக்கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண், ‘திருமணத்திற்கு முன்பே இப்படி இருந்தால், திருமணத்திற்கு பின் என் நிலை கஷ்டமாகிவிடும். எனக்கு இந்த திருமணமே வேண்டாம்’ என, பெற்றோரிடம் கூறி விட்டார். இதனால் வரவேற்புடன் திருமணம் நின்று போனது. மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த பேனர்கள், அலங்கார வளைவுகள் அவசர, அவசரமாக இரவோடு இரவாக அகற்றப்பட்டன. மணமகன், மணமகள் வீட்டாரும் ஊருக்கு திரும்பினர்.மறுநாள் திருமணத்திற்கு வந்தவர்கள் மண்டபம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு விசாரித்து, அதிர்ச்சியுடன் நடையை கட்டினர்.