மத்திய கைலாஷ் மேம்பால பணியை அக்​.31-க்குள் முடிக்க உத்தரவு

சென்னை: ஜூலை 24 தரமணி மத்​திய கைலாஷ் சந்​திப்​பில் நடை​பெற்று வரும் மேம்​பாலப் பணி​களை அக். 31-க்​குள் முடிக்​கு​மாறு அதிகாரிகளுக்கு நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சர் எ.வ.வேலு உத்​தர​விட்​டுள்​ளார்.
இது தொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: சென்னை அடை​யாறு சர்​தார் பட்​டேல் சாலை​யில் நில​வும் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்​கும் நோக்​கில், சர்​தார் பட்​டேல்சாலை​யை​யும் – ராஜீவ்காந்தி சாலை​யை​யும் இணைக்​கும் வகை​யில், தரமணி மத்​திய கைலாஷ் சந்​திப்​பில் எல் (L) வடிவத்​தில் மேம்​பாலம் அமைக்​கப்​பட்டு வரு​கிறது.
இந்த பணி​களை பொதுப்​பணி​கள், நெடுஞ்​சாலைகள் மற்​றும் சிறு துறை​முகங்​கள் துறை அமைச்​சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். அப்​போது, பொது​மக்​களின் போக்​கு​வரத்​துக்கு இடையூறு ஏற்​ப​டாத வகை​யில், மேம்​பாலப் பணி​களை விரைவுபடுத்தி அக்​டோபர் 31-க்​குள் முடிக்​கு​மாறு அதி​காரி​களுக்கு அவர் உத்​தர​விட்​டார்.
மேலும்,சர்​தார் பட்​டேல் சாலை​யில், காந்தி மண்​டபம் சாலை முதல் ஜிஎஸ்டி சாலை வரை, சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்​ளிட்ட முக்​கிய கல்வி நிறு​வனங்​கள் மற்​றும் அரசு அலு​வல​கங்​கள் இருப்​ப​தால், அப்​பகு​தி​யில் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்​கும் வகை​யில் தற்​போதைய 4 வழித்தட சாலை​யை, 6 வழித்​தட​மாக விரி​வாக்​கம் செய்​வதற்​கான சாத்​தி​யக் கூறுகளை ஆய்வு செய்​யு​மாறும் அவர் உத்​தர​விட்​டார்.
இந்த ஆய்​வின்​போது, நெடுஞ்​சாலைத் துறை தலைமை பொறி​யாளர் (கட்​டு​மானம் மற்​றும் பராமரிப்பு பிரிவு) சத்​தி​யபிர​காஷ், சிறப்பு தொழில்​நுட்ப அலு​வலர் ஆர்​.சந்​திரசேகர், சென்னை பெருநகர கண்​காணிப்​புப் பொறி​யாளர்ஜவஹர் முத்​துராஜ், கண்காணிப்பு பொறி​யாளர் வி.சர​வணசெல்​வம், கோட்​டப் பொறி​யாளர் பி.சந்​திரசேகரன் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.