மனசை குளிர வைத்த நிர்மலா சீதாராமன்

சென்னை: ஜூலை 10 –
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFCs) கடன் வசூல் நடைமுறைகள் நியாயமானதாகவும், மரியாதையானதாகவும், இரக்கமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்றும், ரிசர்வ் வங்கியின் (RBI) நியாயமான நடைமுறைக் குறியீட்டுடன் கண்டிப்பாக ஒத்துப்போக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நேற்று நடைபெற்ற NBFC கருத்தரங்கில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், NBFC-கள் குறிப்பாக சிறிய கடன் தொகைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கடுமையான வசூல் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும், வாடிக்கையாளர்களின் கண்ணியத்தின் முக்கியத்துவத்தை பாதுகாக்க வேண்டும். சில நேரங்களில் ஊடக அறிக்கைகள் ரூ.500 போன்ற மிகச் சிறிய கடன் தொகைகளுக்கு எடுக்கப்பட்ட கடுமையான மீட்பு நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுகின்றன. அதை தவிர்க்க வேண்டும்.உங்களிடம் ஒருவர் கடன் வாங்கி இருக்கிறார் என்றால் அவரிடம் கடன் தொகை வசூலிக்கும்போது நியாயமாக வசூலிக்கவும். அவரிடம் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டாம்.மீடியாக்களில் நிறைய பரபரப்பு செய்திகளை பார்க்கிறேன். அது போல நடக்க கூடாது. தங்கத்தை அடகு வைத்தவர்.. அதை திருப்பி மீட்காத பட்சத்தில் ஏலம் விடும்போது முறையாக ஆர்பிஐ விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டு உள்ளார். வங்கிகள் ஏலம் விடும்போது தங்கத்தை முறையாக ஏலம் விட வேண்டும். வங்கிகள் பொதுவாக ஆர்பிஐ விதிகளை பின்பற்றியே தங்கத்தை ஏலம் விடும். ஆனால் சில அடகு கடைகள் அப்படி செய்வது இல்லை.