Home விளையாட்டு மனம் திறக்கிறார் அபிஷேக் சர்மா

மனம் திறக்கிறார் அபிஷேக் சர்மா

புதுடெல்லி, ஏப்ரல் 30- இந்​திய கிரிக்​கெட் அணியின் முன்​னாள் வீரர் யுவராஜ் சிங்​கிடம் பெற்ற பயிற்​சியே எனது ஆட்​டத்தை மேம்​படுத்​தி​யது என்று இந்​திய கிரிக்​கெட் அணி வீரரும், சன்​ரைசர்ஸ் ஹைதரா​பாத் அணி​யின் அதிரடி வீரரு​மான அபிஷேக் சர்மா தெரி​வித்​தார். ஜியோஸ்​டார் சேனலுக்கு அவர் அளித்த பேட்​டி​யில் கூறியதாவது: கரோனா காலத்​தில் யுவ​ராஜ் சிங்​குடன் இணைந்து பயிற்சி மேற்​கொண்​டது எனக்கு ஒரு மிகப்​பெரிய தருண​மாக அமைந்​தது. நான் சிறு​வயது முதலே அவரை ஒரு முன்​மா​திரி​யாகக் கருதி விளை​யாடி வந்தேன். அவரே எனது ஆதர்ச நாயக​ராகத் திகழ்ந்​தார். ஆரம்ப கால​கட்​டத்​தில் அவர் எனக்​குச் சில வழிகாட்டுதல்களை வழங்​கி​னார் என்​றாலும், நாங்​கள் ஒன்​றாகச் செல​விடப் போதிய நேரம் அமைய​வில்​லை. அதன் பிறகு பொது ஊரடங்கு காலம் வந்​து​விட்​டது. அந்​தச் சூழலை, குறிப்​பிட்ட சில வீரர்​களு​டன் மிக நெருக்கமாகப் பணி​யாற்​று​வதற்​கான ஒரு வாய்ப்​பாக கருதினேன். இதைத் தொடர்ந்து யுவ​ராஜ் சிங்​குடன் பயிற்சி பெற்று பேட்​டிங் நுணுக்​கங்​களை கற்​றுக் கொண்டேன். யுவ​ராஜ் சிங்​கால்​தான் எனது கிரிக்​கெட் ஆட்​டம் மேம்​பட்​டது. அவரிடம் பெற்ற அனுபவத்​தால் தேசிய அணிக்​காக அதிக அழுத்​த​முள்ள போட்​டிகளில் சிறப்​பாகச் செயல்​படு​வதற்கு மிக​வும் உதவியது.மேலும் அழுத்​தம் அதி​க​மாக உள்ள போட்​டிகளில் கவனம் செலுத்தி வெற்றி பெறு​வதற்​கான ஒரு வலு​வான மனநிலையை வளர்த்​துக்​கொள்​ள​வும் உதவியது. எங்​கள் பயிற்சி முகாம் தொடங்​கிய​போது, என் நம்​பிக்​கை​யையே அடியோடு மாற்​றியமைத்த ஒரு விஷ​யத்தை யுவ​ராஜ் சிங் என்​னிடம் தெரி​வித்​தார். இப்​போது பயிற்சி பெறு​வது சில உள்​ளூர் போட்டிகளுக்கோ அல்​லது ஐபிஎல் போட்​டிகளுக்கோ அல்ல என்​றும், இது​போன்ற பயிற்சி இந்​திய அணிக்​காகப் பெரும் வெற்​றிகளை ஈட்​டித் தர உதவும் என்று யுவ​ராஜ் சிங் அறி​வுறுத்​தி​னார்.