Home தலைப்பு செய்தி சிவாஜி நகர் பவுரிங் மருத்துவமனை சுவர் இடிந்து8 பேர் பலி

சிவாஜி நகர் பவுரிங் மருத்துவமனை சுவர் இடிந்து8 பேர் பலி

பெங்களூரு, ஜனவரி 29 –
பெங்களூரில் இன்று மாலை நெஞ்சை உலுக்கும் துயர சம்பவம் நடந்தது. திடீர் என பெய்த கனமழை காரணமாக பவுரிங் மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட 8 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். இன்று மாலை பெங்களூருவில் பெய்த கனமழையால் பௌரிங் மருத்துவமனையில் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.


50 மீட்டர் நீளமுள்ள சுவர் இடிந்து விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்தச் செய்தி வெளியானவுடன், பெங்களூரு நகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தார். மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றினர். வியாபாரிகள் பழைய சுவரின் மீது ஒரு பெரிய தார்ப்பாயை விரித்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். திடீரென பெய்த கனமழையால், வியாபாரிகளும் பாதசாரிகளும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அந்தத் தார்ப்பாயின் கீழ் நின்றிருந்தனர். புயல் மழையின் காரணமாகவே சுவர் இடிந்து விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.


காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தின் கதறல் பெரிதாக காணப்பட்டது. சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணியை நடைபெற்று வருகிறது