
கொழும்பு, ஜூலை 17- வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. கொழும்பு, பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில், வங்கதேசம் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதிலும் 21 பந்துகள் மீதமிருக்க 133 ரன்கள் என்ற இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இது இலங்கைக்கு எதிராக வங்கதேசம் பெற்ற முதல் டி20 தொடர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
Next Stay பதும் நிசங்கா 39 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து நிலைத்து நின்று போராடினார். ஆனால் இலங்கை அணி 15 ஓவர்களுக்குள் 6 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்தது. தசுன் ஷனாகா கடைசி நேரத்தில் 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் எடுத்தார். அதிலும் கடைசி ஓவரில் மட்டும் 22 ரன்கள் குவித்து இலங்கை அணியின் ஸ்கோரை 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களாக உயர்த்தினார். ஆனால், இந்த ரன்கள் போதுமானதாக இல்லை. இந்தப் போட்டியில், மெதுவான ஆடுகளத்தில் மஹேதி ஹசனின் அபார பந்துவீச்சு இலங்கை அணியின் சரிவுக்குக் காரணமாக அமைந்தது. அவர் தனது வாழ்க்கையின் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். 4 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இலங்கை அணியின் மிடில் ஆர்டரை காலி செய்தார். இதன் மூலம், கொழும்பில் டி20 போட்டிகளில் எந்த ஒரு பந்துவீச்சாளரும் இதற்கு முன் பதிவு செய்யாத சிறந்த பந்துவீச்சை மஹேதி ஹசன் பதிவு செய்தார். அவர் 2012 டி20 உலகக் கோப்பையில் ஹர்பஜன் சிங் இங்கிலாந்துக்கு எதிராக செய்த சிறந்த சாதனையான 12 ரன்களுக்கு 4 விக்கெட் சாதனையை முறியடித்தார்.