பெங்களூரு: ஆக. 2-
மாமனாரை மருமகன் அடித்து கொன்றார். அவருக்கு உடந்தையாக மாமியாரும் மனைவியும் (அதாவது மாமனாரின் மகள்) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த வழக்கில் துப்பு துலக்கிய போலீசார் மேற்கண்ட 3 பேரையும் கைது செய்துள்ளனர். பெங்களூர் காடு கோடியில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
தேவனஹலியை சேர்ந்தவர் பாபு வயது 48. இவரது மகள் ராமகிருஷ்ணா என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். இது பாபுவுக்கு பிடிக்கவில்லை அடிக்கடி சண்டை போட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று பாபு வீட்டிற்கு வந்து மீண்டும் இந்த பிரச்சனையை கேட்டு வம்பு இழுத்ததாக கூறப்படுகிறது. அப்போது நடந்த சண்டையில் பாபு தனது மனைவியை ஒரு அறை கொடுத்து இருக்கிறார். இதைப் பார்த்த மருமகன் ராமகிருஷ்ணா கடும் ஆத்திரமடைந்து எனது மாம மாமியாரை அடிக்கிறாயா என்று கூறி பாபுவை போட்டு அடித்து துவைத்து இருக்கிறார். இதில் பாபு சம்பவ இடத்திலேயே பலியாக இருக்கிறார். பிறகு இவரது உடலை கோளாறுக்கு கொண்டு சென்று அங்கு யாரும் இல்லாத ஒரு காட்டுப் பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு திரும்பி இருக்கின்றனர். பாபுவின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மேற்கண்ட சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து மூன்று பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

















